பேயாக மிரட்டும் ஹன்சிகா
02 நவ, 2023 – 12:10 IST

திருமணத்திற்கு பிறகு தனது அடுத்த ரவுண்டை ஆரம்பித்திருகிறார் ஹன்சிகா. அண்மையில் அவரது நடிப்பில் ‘பார்ட்னர்’ என்ற படம் வெளியானது. அதில், ஆதிக்கு ஜோடியாக அவர் நடித்திருப்பார். மேலும், சாந்தனு மற்றும் முகின் ராவுடன் இணைந்து ‘மை3’ என்ற தொடரிலும் அவர் நடித்திருந்தார். தற்போது 105 மினிட்ஸ், மை நேம் ஸ்ருதி, ரவுடி பேபி, மேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். எல்லாமே சோலோ ஹீரோயின் படங்கள்.
இந்த நிலையில் அவர் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் ‘கார்டியன்’. சபரி மற்றும் குரு சரவணன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடக்கின்றன. சாம்.சி.எஸ் இசை அமைக்கிறார். வருகிற 30ம் தேதி படம் வெளிவருகிறது. ஏற்கெனவே அரண்மனை 2 படத்தில் பேயாக ஹன்சிகா நடித்தார். இதை தொடர்ந்து கார்டியன் படத்திலும் பேயாக நடித்திருக்கிறார். தற்போது இதன் டீசர் வெளியாகி உள்ளது.
+ There are no comments
Add yours