அப்பவும் கேக்காம அந்தப் பெற்றோர் ஐஸ்வர்யாவைப் பார்த்துப் பேசணும்னு அடம்பிடிக்க, சேனல் இறங்கி வரவே இல்லை. ஒரு போட்டியாளருக்காக விதிமுறைகளை மீறினா அது தவறான முன்னுதாரணமாகிடும்னு சொன்ன நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், ஐஸ்வர்யாவிடம் அவருடைய அப்பா அம்மா சொல்ல விரும்பியதை மட்டும் கேட்டு, தாங்களே சொல்லி எச்சரிப்பதாகச் சொல்லி ஒருவழியாகச் சமாதானப்படுத்தி அனுப்பியிருக்காங்க. அவங்க அங்கிருந்து போன பிறகு அவங்க சொன்ன தகவலும் ஐஸ்வர்யாவுக்கும் அனுப்பப்பட்டிருக்குனு தெரியுது” என்கிறார்கள்.
ஐஸ்வர்யாவின் பெற்றோர் அவருக்கு அனுப்பிய மெசேஜ் அவருக்குச் சென்று சேரும் முன்பே, ஐஸ்வர்யாவும் நிக்சனும் கண்ணாடி தாண்டி நேரடியாகவே முத்தம் கொடுத்துக்கொண்டனர் என்பதாக சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இது ஐஸ்வர்யாவின் பெற்றோரை மேலும் துயரப்படுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஐஸ்வர்யாவின் நட்பு வட்டத்தில் சிலரிடம் பேசினோம்.
“எங்களுக்கென்னவோ இது சந்தேகமா இருக்கு. நல்லா கேம் ஆடிட்டிருந்த பொண்ணு திடீர்னு எப்படி இப்படி நடந்துப்பா? இவ ஏற்கெனவே அதாவது முந்தைய சீசன்லயே பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் போயிட்டு வந்திருக்கா. அமீர் பாவனியும் நிறைய டிப்ஸ் கொடுத்து அனுப்பியிருப்பாங்க. அதனால இவ கூடவே நல்லா பழகற மாதிரி நடிக்கிற சில சக போட்டியாளர்கள், எங்கே இவ தங்களுக்கு வலுவான போட்டியாளரா உருவாகிடுவாளோன்னு பயந்து, இவகிட்ட எதையாவது சொல்லி திசை திருப்புறாங்களோனு தோணுது” என்கிறார்கள்.
+ There are no comments
Add yours