ஷாருக் பிறந்து வளர்ந்ததெல்லாம் டெல்லிதான். ஒரு முறை அவரின் காதலியுடன் சண்டை ஏற்பட்டிருக்கிறது. பேசாமல் இருந்த காதலியை தேடிக் கொண்டு முதல் முறையாக நண்பர்களுடன் மும்பை வந்திருக்கிறார் ஷாருக். மும்பையில் எந்த இடமும் பெரிதாக பரிட்சயமில்லாத ஷாருக் தன் காதலி எப்படியும் ஒரு பீச்சில்தான் இருக்க வேண்டும் எனக் கூறி டாக்ஸியில் ஏறி பீச்சுக்கு செல்லுமாறு கூறியிருக்கிறார். டிரைவரோ எந்த பீச்சென கேட்க ஷாருக்கிற்கு ஒரே ஷாக். மும்பையில் ஒரே ஒரு பீச்தானே இருக்கிறது என ஷாருக் சொல்ல மும்பையில் நிறைய பீச்சுகள் இருக்கிறதென ட்ரைவர் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு பீச்சாக சென்று தேடித் திரிந்து கடைசியில் தன் காதலியைக் கண்டுபிடித்திருக்கிறார் ஷாருக். அவர்தான் ஷாருக்கின் மனைவி கௌரி.
கடந்த 30 ஆண்டுகளில் அவர் அதற்காக கொட்டியிருக்கும் உழைப்பு அசாத்தியமானது. ஆனால், கோடிகள் வசூலித்த அவரது வெற்றிப்படங்களல்ல, ஷாருக்கின் குணாதிசயங்கள்தான் இத்தனை மக்கள் அவரை விரும்புவதற்கான காரணம். இப்போதுமே கூட அவர் ஏறும் மேடைகளிலெல்லாம் பாருங்கள். தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்கிற மிடுக்கே ஷாருக் கானிடம் இருக்காது. தன்னுடைய இமேஜை சரித்துக் கொண்டு உடனிருக்கும் சக நண்பர்களை இயல்பாக்கும் விதத்தில்தான் எப்போதுமே நடந்துகொள்வார். சமீபத்தில் சென்னையில் நடந்த ஜவான் பட விழாவையுமேகூட இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ‘என்னால தளபதி விஜய் மாதிரியெல்லாம் டான்ஸ் ஆட முடியாது…’ என மேடையிலேயே பேசியிருப்பார். ஷாருக் மாதிரியான ஒரு நடிகர் இப்படி ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுப்பதெல்லாம் அரிதினும் அரிதாகக் காணும் காட்சியே. அதேமாதிரிதான், ஏறும் எல்லா மேடைகளிலும் நகைச்சுவையாக எதையாவது பேசி தன்னைத் தானே வாரிக் கொள்வார்.
+ There are no comments
Add yours