‘லியோ’ படத்தின் வெற்றிவிழா இன்று சென்னையில் நடைபெற்றிருந்தது.
இப்படத்திற்காக ஏற்கெனவே இசை வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு டிக்கெட் மற்றும் பாதுகாப்புப் பிரச்னைகளால் ரத்தானது. இதனால் நடிகர் விஜய்யின் பேச்சைக் கேட்க எதிர்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. இந்நிலையில், ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக இன்று ‘லியோ’ படத்தின் வெற்றிவிழாவில் விஜய் பேசியிருந்தார்.
மேடையில் ஏறியதும் `நான் ரெடி தான் வரவா!’ பாடலுடன் உரையைத் தொடங்கினார் விஜய். பீப் இட்ட இடங்களில் டவ் டவ் என்கிற வார்த்தையையே பயன்படுத்தியே பாடலைப் பாடிய பிறகு உரையைத் தொடங்கினார். என் நெஞ்சில் குடியிருக்கும்… என் அன்பான நண்பா, நண்பிகள்… நான் தான் உங்கள என் நெஞ்சுல குடி வச்சுருக்கேன்னு நெனச்சேன். நீங்கதான் என்னை நெஞ்சுல வச்சிருக்கீங்க. நான் குடியிருக்கிற கோயிலுங்க அது!
எந்த எதிர்பார்ப்பும் இல்லாம நீங்க கொடுக்குற அன்புக்கு நான் என்ன செய்யப் போறேன்… என்னோட தோல உங்க உடம்புக்கு செருப்பாக தச்சு போட்டா கூட ஈடாகாது. கொஞ்ச நாளா சோசியல் மீடியால பாக்கறேன். நீங்க அதிகமா கோவப்படுறீங்களே. அது ஏன்… யார் மனசையும் புண்படுத்த வேண்டாம். நமக்கு நிறைய வேலைகள் இருக்கு. அமைதியா இருங்க. காந்தி சொல்ற மாதிரி தான் `non violence is powerful than violence’
எனப் பேசியவர் தன் வழக்கமான பாணியில் குட்டி ஸ்டோரியை சொல்லத் தொடங்கினார். ஒரு காட்டுக்கு ரெண்டு பேர் வேட்டைக்கு போறாங்க. அந்த காட்டுல மான், புலி, சிங்கம், காக்கா கழுகுன்னு நிறைய மிருகங்கள் இருக்கு. (ரசிகர்களின் ஆராவாரத்தில் அரங்கம் அதிர்ந்தது.) காட்டுல இதெல்லாம் இருக்கும்ல அதனாலதான் சொன்னேன்ப்பா! இந்தக் காட்டுக்கு வேட்டைக்கு போறாங்க. ஒருத்தர் வில் அம்பு வச்சிருக்காரு. இன்னோரு நபர் ஈட்டி வச்சிருக்காரு. வில் அம்பு வச்சுருக்கிறவர் முயல குறி வச்சு வேட்டையாடிறாரு. இன்னொருத்தர் யானையைக் குறி வைக்கிறார். அவரால ஒன்னும் பிடிக்க முடியல.
இதுல யார் மாஸ் தெரியுமா.. யானைக்கு குறி வச்சவர் தான் மாஸ், கைக்கு கிடைக்கிறது இல்லமா பெருசா குறி வச்சிருக்கார்ல. அது மாதிரிதான் உயிரிய விஷயங்களுக்கு ஆசைப்படணும். அதுல தப்பே இல்ல. வீட்டுல குட்டி பையன் அப்பா ஓட சட்டையை போட்டுக்குவான். அப்பாவோட வாட்ச்ச கட்டிப்பான். அப்பாவோட சேர்ல உட்காந்து பார்ப்பான். அதுல என்ன தப்பு இருக்கு? ஆசைப்படுறதுலயும் கனவு காணுறதுலயும் எந்த தப்பும் இல்லை
பாட்டு ரிலீஸ் ஆகி ரெண்டு லைன் கட் ஆச்சு… விரல் இடக்குலனு ஒரு வரிய தூக்கினாங்க. அதை ஏன் சிகெரட்ன்னு நினைக்கிறீங்க… அதுல தீர்ப்பை மாத்தி எழுதுற பேனாவாக கூட இருக்கலாம்… அண்டால குடுக்கிறது கூழ்ழாக கூட இருக்கலாம். இது மாதிரி மலுப்பலான பதில நான் சொல்லலாம். ஆனா சினிமாவை சினிமாவா பாருங்க.
ஒரு நெகடிவ் கதாபாத்திரத்திற்கு தேவையான விஷயங்கள் வச்சாங்க. அதெல்லாம் நீங்க எடுத்துக்கமாட்டீங்கனு எனக்கு தெரியும். ஸ்கூல், காலேஜ் பக்கத்துல தான் ஒயின் ஷாப் இருக்கு.. அவங்க என்ன ரெண்டு ரவுண்டு அடிச்சுட்டு போறாங்களா. அவங்கெல்லாம் ரொம்ப தெளிவு. என் படம் நல்லா இல்லைனாலும் நல்ல இல்லைன்னு போயிடறாங்க. உங்கள்ல பலர் சொல்லமையே பல நல்ல விஷயங்கள் செய்றீங்க.
Avm சரவணன் வடபழனில போகுற அப்போ ஒருத்தவங்களுக்கு உதவி பண்ணயிருக்காங்க.அப்போ அவுங்க நன்றி எம்ஜிஆர் ன்னு சொன்னாங்களாம். யார் உதவி பண்ணாலும் அது MGR பண்ணதுன்னு நினைச்சுடறாங்க. எனக்கு ஒரு ஆசை வருங்காலத்துல இது மாதிரி உதவி பண்றது நம்ம பசங்க தான்னு சொல்லணும். அதை கேட்டு நான் பெருமைப்படனும்.
இதன்பின் தொகுப்பாளர் சில கேள்விகளை கேட்க அதற்கும் விஜய் பதில் சொன்னார்.லோகேஷ் கனகராஜ் 10 படம் பண்ணிட்டு உங்க கட்சியில இணைஞ்சா என்ன பதவி கொடுப்பீங்க? என தொகுப்பாளர் கேட்க,
அதற்கு விஜய், ‘கற்பனையா கேட்குறீங்க. கற்பனையாவே சொல்றேன். போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மந்திரி.
2026 – 2025 க்கு அப்புறம் வர்ற வருஷம் என தொகுப்பாளர் கேட்க,.
அதற்கு விஜய், ‘2026 ல ஃபுட்பால் வேர்ல்டு கப் வருது.’ என கூறினார். ‘கொஞ்சம் சீரியஸா சொல்லுங்க..’ என தொகுப்பாளர் கேட்க ‘கப்பு முக்கியம் பிகிலு’ என கூறினார் விஜய்.
+ There are no comments
Add yours