ஒரே மாதிரியான படங்களை பண்ணுவதற்குச் சலிப்பாக இருக்கும். அதனால்தான், வேறுவேறு பாணியிலான படங்களில் நடிக்கிறேன். ஒரு ரிக்ஷாகாரரிடம் என் படங்கள் பிடிக்குமா என்று கேட்டதற்கு அவர், “எனக்கு என்ன பிடிக்குனு நெனச்சு நீ படம் எடுக்காத, உனக்கு என்ன பிடிச்சிருகோ அதைப் பண்ணு. அது எனக்கு பிடிக்கும்” என்றார். அதைத்தான் நான் அடிக்கடி நினைத்து பார்த்துக்கொள்வேன். அதைத்தான் நான் இன்றும் பின்பற்றுகிறேன்.
‘மெட்ராஸ்’ படத்தின் அரசியல் குறித்துப் பேசிய கார்த்தி, “நான் மெட்ராஸில் வளர்ந்தவன் எனக்கு சாதியெல்லாம் தெரியாது. அப்படி வளர்ந்தவன் நான். மெட்ராஸில் வளர்ந்தவர்களுக்குச் சாதியெல்லாம் தெரியாது. யாரோடு பழகினாலும் அவர்களுடைய பெயரைக் கேட்போம் அவ்வளவுதான், அதைத்தாண்டி சாதி பற்றியெல்லாம் பேசிக்கொள்ள மாட்டோம்.
+ There are no comments
Add yours