ராணுவத்தில் போர் விமானியாக இருக்கும் ஒரு பெண்ணின் வீரம், துணிச்சல், கண்ணீர் உள்ளிட்டவற்றைச் சொல்லும் திரைப்படமான இது பாலிவுட்டில் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் பெரிய ஓப்பனிங் கிடைக்கவில்லை. பல திரையரங்க உரிமையாளர்கள் முதல் காட்சிகளையே ரத்து செய்ய நேரிட்டது என்று வெளிப்படையாகத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று உத்தரப் பிரதேசத்தின் முதல்வரான யோகி ஆதித்யநாத், கங்கனா ரணாவத் மற்றும் படக்குழுவினர்களுடன் லக்னோவிலுள்ள லோக்பவன் அடிட்டோரியத்தில் படம் பார்த்தார்.
இதையடுத்து பத்திரிகையாளர்களிடம் பேசிய கங்கனா, “யோகி ஆதித்யநாத் படத்தைப் பார்க்கும்போது ரொம்பவும் எமோஷனாகி கண் கலங்கிவிட்டார். இது ஒரு பெண்ணின் வீரத்தையும், துணிச்சலையும் பற்றிப் பேசும் படம். எல்லோரும் பார்க்க வேண்டிய திரைப்படம்” என்றார். இதற்கு முன் கங்கனா, இப்படத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும் பிரத்யேகமாக டெல்லியில் திரையிட்டு காண்பித்தது குறிப்படத்தக்கது.
சமீபகாலமாகத் தொடர்ந்து அரசியல் கருத்துகள், அரசியல் தலைவர்கள் பற்றிய ட்வீட்கள் மற்றும் அரசியல் சார்ந்து படங்கள் நடித்து வரும் கங்கனா, இந்திரா காந்தியின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்ட ‘எமர்ஜென்ஸி’ திரைப்படத்தை நடித்து, இயக்கியும் வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.
+ There are no comments
Add yours