மோகனுக்கு ஜோடியாக அனுமோல் – ‘ஹரா’ படத்தின் அப்டேட் | Anumol pairs with Mohan in Haraa directed by vijaysrig

Estimated read time 1 min read

சென்னை: நடிகர் மோகன் நடிக்கும் ‘ஹரா’ படத்தில் அவருக்கு ஜோடியாக அனுமோல் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

‘தாதா 87’, ‘பவுடர்’ படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் புதிய படம் ‘ஹரா’. இந்தப் படத்தின் மூலம் 14 வருடங்களுக்குப் பிறகு மோகன் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர், சாருஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு லியாண்டர் லீ மார்டி இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜிக்கு சாலை விபத்தில் படுகாயம் ஏற்பட்டதால் அவரது சிகிச்சையின் காரணமாக படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் ‘ஹரா’ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியபோது தேதிகள் ஒத்துழைக்காததால் ஏற்கனவே ஒப்பந்தமான பிரபல நடிகைக்கு பதில் மோகன் ஜோடியாக அனுமோல் நடித்துள்ளார். சிறப்பான பங்களிப்பை அனுமோல் வழங்கி உள்ளதாகவும் அவரது கதாபாத்திரம் பேசப்படும் என்றும் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்துள்ளார்.

ஜீ5 ஓடிடியில் ‘அயலி’ வெப்ஸ் சீரிஸ் மூலம் ரசிகர்களிடையே அனுமோல் கவனம் பெற்றிருந்தார். மேலும், வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய் 68’ படத்தில் மோகன் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours