காதல் திருமணம்; மாப்பிள்ளை குறித்து சஸ்பென்ஸ்; `கார்த்திகை தீபம்' அர்த்திகாவிற்கு கல்யாணம்!

Estimated read time 1 min read

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `கார்த்திகை தீபம்’. இந்தத் தொடரில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர் அர்த்திகா.

சின்னத்திரையில் இது அவருடைய முதல் தொடராக இருந்தாலும் சட்டென மக்கள் மனதில் தனக்கென ஓர் இடத்தை தக்கவைத்துக் கொண்டார். 

அர்த்திகா

அர்த்திகா கேரள மாவட்டம் கோட்டயத்தைச் சேர்ந்தவர். தமிழில் முதன்முதலாகத் திரைப்படங்கள் மூலமாகத்தான் நாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். அவர் நடித்திருக்கும் நான்கு திரைப்படங்களும் இன்னும் வெளிவரவில்லை. இந்த நான்கு திரைப்படங்களுள் ஒன்றுதான் `பிளாக் அண்ட் வொயிட்’. இந்தப் படத்தில் அர்த்திகாவுக்கு ஜோடியாக கார்த்திக் ராஜ் நடித்திருந்தார்.

இந்தப் படத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் ஜோடியாக `கார்த்திகை தீபம்’ தொடரில் நடிக்கிறார்கள். இந்தத் தொடரில் அர்த்திகா நடிப்பதற்கு `திருமதி செல்வம்’ அபிதா தான் அவரை ரெஃபர் செய்திருக்கிறார். தற்போது இந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

அர்த்திகா

இந்நிலையில் வருகிற நவம்பர் மாதம் 6ஆம் தேதி அர்த்திகாவிற்குத் திருமணம் நடைபெற இருக்கிறது. அர்த்திகா தன் காதலனை மணக்க விருக்கிறார். இவர்களுடைய திருமணம் கேரளாவில் பெற்றோர்கள், உறவினர்கள் முன்னிலையில் நடைபெற இருக்கிறது.

தனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தன் ரசிகர்களுக்கு அர்த்திகா விரைவிலேயே அறிவிப்பார் எனத் தெரிகிறது. அர்த்திகா அவருக்குத் திருமணம் ஆகப் போகிறது என்பதை உறுதி செய்திருக்கிறார். ஆனால், மாப்பிள்ளை யார் என்பதை சர்ப்ரைஸாக வைத்திருக்கிறார்.

வாழ்த்துகள் அர்த்திகா!

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours