Kangana Ranaut: "வயதான பெண்மணியைக் கொன்றது கோழைத்தனம். இதில் பெருமைப்பட ஒன்றுமில்லை!" கங்கனா அதிரடி

Estimated read time 1 min read

பஞ்சாபி – கனடிய பாடகர் ஷுப்னீத் சிங், `ஜம்மு-காஷ்மீர்’ இல்லாத இந்தியாவின் வரைபடத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததாகப் பெரும் சர்ச்சைகள் வெடித்து, கடந்த செப்டம்பர் மாதம் பெரும் பேசுபொருளாகியிருந்தது.

இதன் காரணமாக ஷுப்னீத் சிங்கிற்கு எதிராகப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து, செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடக்கவிருந்த அவரின் இசைக்கச்சேரி ரத்தானது. அந்த இசைக் கச்சேரியை நடத்தவிருந்த ‘Boat’ நிறுவனமும் “ஷுப் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெரிவித்த கருத்துகளை நாங்கள் அறிந்ததும், நாங்கள் எங்கள் ஸ்பான்சர்ஷிப்பைத் திரும்பப் பெற முடிவு செய்தோம்” என்று கூறியிருந்தது.

குறிப்பாக, பா.ஜ.க இளைஞர் அமைப்பான ‘BJYM’ இந்தியாவில் ஷுப்னீத் சிங் இசைக் கச்சேரி நடத்துவதைக் கடுமையாக எதிர்த்தது. இதுபோன்ற பல சர்ச்சைகளால் அவரது இசைக்கச்சேரி ரத்தானது.

ஷுப்னீத் சிங்கின் இந்திய வரைபட சர்ச்சை

இந்நிலையில் தற்போது ஷுப்னீத் சிங், பஞ்சாப் மேப்பையும், இந்திரா காந்தியைக் கொலையையும் பெருமையாகக் குறிப்பிடும் விதமாக டி-சர்ட் ஒன்றை இசைக்கச்சேரியில் ரசிகர்களுக்குக் காண்பித்தார் என்று மீண்டும் ஒரு சர்ச்சைக் கிளம்பியுள்ளது. இதற்காக ஷுப்னீத் சிங் மீது மீண்டும் கடுமையான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இது தொடர்பான காணொலி ஒன்றைத் தனது ‘X’ தளத்தில் பகிர்ந்த பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், “கோழைத்தனமாக ஒரு வயதான நபரை அவரின் பாதுகாவலரை வைத்தே கொன்றதைக் கொண்டாடுகிறார்கள். நம்பிக்கையுடன் பாதுகாக்க நியமிக்கப்பட்டவர், அந்த நம்பிக்கையையே ஆயுதமாகக் கொண்டு பாதுகாக்க வேண்டியவர்களைக் கொல்வது கோழைத்தனமான செயல். அது ஒருபோதும் துணிச்சலான செயலாகாது.

நிராயுதபாணி, வயதான பெண்மணி, ஜனநாயகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக இருந்த ஒரு பெண்மணி மீது இதுபோன்ற கோழைத்தனமாகத் தாக்குதல் நடத்தியதற்காக வெட்கப்பட வேண்டும், பெருமைப்படக் கூடாது ஷுப்னீத் ஜி” என்று பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில், குறிப்பாக பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours