நடிகை காஜல் அகர்வால், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துவருகிறார். தனது நீண்ட நாள் காதலர் கவுதம் கிட்ச்லுவை 2020-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நீல் என்ற மகன் உள்ளார். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். தெலுங்கில் அவர் நடித்து சமீபத்தில் வெளியான ‘பகவந்த் கேசரி’வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் காஜல் அகர்வால் மும்பையில் புது வீட்டில் குடியேறியுள்ளார். வீட்டில் கிரஹப்பிரவேசம் நடந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர், “இந்த வார தொடக்கத்தில் புதிய வீட்டுக்கு கிரஹப்பிரவேசம் செய்தோம். நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். என் மனம் மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours