’லியோ’ தொடர்பான விமர்சனங்களை ஏற்கிறேன்: லோகேஷ் கனகராஜ் | Lokesh kanagaraj speech in Japan audio launch

Estimated read time 1 min read

செய்திப்பிரிவு

Last Updated : 29 Oct, 2023 11:25 AM

Published : 29 Oct 2023 11:25 AM
Last Updated : 29 Oct 2023 11:25 AM

சென்னை: ‘லியோ’ படம் தொடர்பாக வரும் கலவையான விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘ஜப்பான்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார்.

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘ஜப்பான்’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இதில் கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். சுனில், வாகை சந்திரசேகர், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், விஜய் மில்டன், மலையாள நடிகர் சணல் அமன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று (அக்.28) நடைபெற்றது. இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் லோகேஷ் பேசியதாவது: ஒரு இயக்குநரின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட வேண்டுமெனில் அதறகான பரிசோதனை முயற்சிக்கு ஒரு பெரிய நடிகர் தயாராக இருக்க வேண்டும். என்னுடைய கரியரில் அப்படியானவர் கார்த்தி. அவருடைய படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது எனக்கு பெருமை. மார்ச் அல்லது ஏப்ரலில் ரஜினி உடனான படம் தொடங்கும். இன்னும் ஓரிரு நாட்களில் ‘லியோ’ சக்ஸஸ் மீட் குறித்த அப்டேட் வரும். படத்தின் வசூலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. அது தயாரிப்பாளார் தொடர்புடைய விஷயம். மக்களுக்கு பிடித்திருக்கிறதா என்பதுதான் முக்கியம். திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்பை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவையாக இருப்பதாக கலவையான விமர்சனங்களும் வருகின்றன. அதையும் ஏற்றுக் கொள்கிறேன்” இவ்வாறு லோகேஷ் கனகராஜ் பேசினார்.

தவறவிடாதீர்!


Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours