“என் காதல் கண்மணி’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான விக்ரம் தன் நாயகப் பயணத்தில் 33-வது ஆண்டை நிறைவு செய்கிறார். பல படங்கள், பல பரிமாணங்கள், பல வேரியேஷனில் பல கதாபாத்திரங்கள் என்று தன் கலையுலகப் பயணத்தில் அசத்தி வருகிறார். அந்த வரிசையில் ‘தங்கலான்’, ‘துருவ நட்சத்திரம்’ என வரிசைக் கட்டி நிற்கிறது விக்ரமின் லைன் அப். இதற்கிடையில் ‘கர்ணா’ படமும் காத்திருக்கிறது.
இந்நிலையில் ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ மற்றும் தற்போது வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்ற ‘சித்தா’ படத்தை இயக்கிய அருண்குமார், விக்ரமின் 62வது படத்தை இயக்குகிறார். இதற்கு ஜி.பி பிரகாஷ் இசையமைக்கிறார். ரியா சிபு இப்படத்தைத் தயாரிக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘சித்தா’ படத்தைப் போலவே இதுவும் ஒரு சமூக பிரச்னையை மையாகக் கொண்ட திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் விக்ரம் மளிகைக் கடை வைத்து நடத்துபவராக குடும்பம், குழந்தை என வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு இன்னொரு முகமும் உண்டு என்பதாகவும் தெரிகிறது. படம் தொடர்பான இந்த அறிவிப்பு வீடியோவிலேயே இதற்கான குறியீடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த டீசர் வீடியோவின் மேக்கிங்கும், அதில் விக்ரமின் நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
+ There are no comments
Add yours