கார்த்தியின் 25வது படம் என்பதால் கார்த்தியுடன் பணியாற்றிய இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பலர் கலந்து கொண்டு கார்த்தி குறித்து நெகிழ்ச்சியாகப் பேசினர். இவ்விழாவில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் அரங்கில் நுழைந்த நடிகரும், கார்த்தியின் சகோதரருமான சூர்யா, கார்த்தியின் திரைப்பயணம் குறித்தும் ‘ஜப்பான்’ திரைப்படம் குறித்தும் பேசினார்.
அவர் பேசியவை, “இன்றைய நாளை, ரொம்ப அழகான நாளாக மாற்றிய அனைவருக்கும் நன்றி. கார்த்திக்கு இப்படி ஒரு அடையாளத்தை இப்படி ஒரு புகழை கொடுத்த அத்தனை பேருக்கும் எங்களுடைய குடும்பத்தின் சார்பாக நன்றி சொல்லிக் கொள்கிறேன். 20 வருடத்திற்கு முன்பாக கமல் சார் பூஜை போட்டு ‘பருத்திவீரன்’ படம் தொடங்கப்பட்டது. படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி சார், ‘கிடைத்த வாய்ப்பை கார்த்தி சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்’ எனப் பாராட்டினார். அந்தச் சம்பவமெல்லாம் இப்போது ஞாபகம் வருகிறது.
என்னை விட ஞானவேல் ராஜாதான் கார்த்தியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம். ‘இவ்ளோ கஷ்டப்படறத விட நாலு பன்னிக்குட்டிய மேய்க்கலாம்னு…’ கூட சில சமயங்கள்ல நானும் கார்த்தியும் பேசியிருக்கோம். ஆனா, நீங்க எங்கக்கிட்ட இப்படிப்பட்ட படங்கள்தான் கேட்டீங்க. கஷ்டப்பட்டு சிறப்பான கதைகளைத் தேர்வு செய்ய வச்சீங்க. ரசிகர்கள் என்னிடமே வந்து உங்களை விட உங்கள் தம்பியைத்தான் பிடிக்கும் என்பார்கள். என்னை விட கார்த்திதான் சினிமாவுக்கு அதிக மரியாதை கொடுப்பார்.
+ There are no comments
Add yours