திரைக்கதைக்குப் பக்கபலமாக இருந்து நம்மைப் பாராட்டத்தூண்டுவது வசனங்கள்தான். இசையும் கதையோடு சேர்ந்து மிரட்டுகிறது. அதிகார வர்க்கத்தின் ஆதிக்கம், சுயநலம், லாபநோக்கம் அதனால் சம்பந்தமே இல்லாதவர்கள் எப்படிப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பெரும் உழைப்பைச் செலுத்திப் புரியவைக்க முயற்சி செய்திருக்கும் இயக்குநர்கள் சமீர் சக்சேனாவுக்கும் அமித் கோலானிக்கும் பாராட்டுகள்.
உண்மையிலேயே சமூகத்தில் விளிம்புநிலை மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டவர்களால் மட்டும்தான், சரியான அரசியல் புரிதலுடன் ஒரு படைப்பைக் கொடுக்கமுடியும். யார் பக்கம் நீதி இருக்கிறது என்பதெல்லாம் பார்க்காமல், பலம் இல்லாதவனை வீழ்த்தி பலம் பொருந்தியவன் வாழ நினைப்பதுதான் ‘சர்வைவல் ஆஃப் ஃபிட்டஸ்ட்’ என்பதை வலியுடன் காண்பித்து, இச்சமூக அவலத்திற்கு எதிராக நம்மையும் யோசிக்க வைக்கிறார்கள். அந்த வகையில் ஒரு முக்கியமான அரசியல் பதிவாகவும் இந்தத் தொடர் தடம் பதிக்கிறது.
அதேநேரம், ஒரு சில மைனஸ்களும் உள்ளன. நோய், மருத்துவம், ஆராய்ச்சி என இயக்குநர் எளிமையாக நமக்குப் புரிய வைக்க முயன்றாலும் சில காட்சிகளைப் புரிந்துகொள்ள, டாக்டரைப் பக்கத்தில் உட்காரவைத்துக்கொண்டுதான் பார்க்கவேண்டியிருக்கும்போல.
+ There are no comments
Add yours