இறைவன் (தமிழ்) – Netflix

குற்றவாளிகளைத் தண்டிக்கும் (கொல்லும்) அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும் அசிஸ்டென்ட் கமிஷனர் அர்ஜுன் (ஜெயம் ரவி), மற்றும் அவரது நண்பர் ஆண்ட்ரூ இருவரும் மிகக் கொடூரமான முறையில் இளம் பெண்களை நிர்வாணப்படுத்திக் கொல்லும் கொலைகாரனைக் கண்டுபிடித்தார்களா என்பதுதான் இதன் கதைக்களம். ஜெயம் ரவி, நயன்தாரா, நரேன் உள்ளிட்டோர் நடிப்பில் ஐ. அகமது இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ரங்கோலி (தமிழ்) – Amazon Prime Video
வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் ஹமரேஷ், முருகதாஸ், பிரார்த்தனா, அமித் பார்கவ், சஞ்சய், ராகுல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரங்கோலி’. காதல், நட்பு கலாட்ட நிறைந்த இத்திரைப்படம் தற்போது ‘Amazon Prime Video’ தளத்தில் வெளியாகியுள்ளது.
Skanda (தெலுங்கு) – Disney+ Hotstar
போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் ராம் பொதினேனி, ஸ்ரீலீலா, சாய் மஞ்சரேக்கர் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த தெலுங்குத் திரைப்படமான இது தற்போது ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநில முதலமைச்சர் மகள் தனது திருமணத்தன்று, காதலரான தெலங்கானா மாநில முதலமைச்சரின் மகனோடு வெளியேறிவிடுகிறார். கோபமைடைந்த ஆந்திரா முதலமைச்சர் தன் நீண்ட கால நண்பரான தெலங்கானா முதலமைச்சரை எதிர்க்கிறார். அவரின் மகனைக் கொல்ல நினைக்கிறார். இந்த அசைன்மென்ட் நாயகன் ராம் பொத்தினேனிக்குக் கொடுக்கப்படுகிறது. ஆனால் ராம் பொத்தினேனி, இரண்டு மாநில முதலமைச்சர்களின் மகள்களையும் கடத்திக்கொண்டு செல்கிறார். இதற்கான காரணம் என்ன, யார் இவர், இரண்டு மாநில முதலமைச்சர்களுக்கும் ஹீரோவுக்கும் என்ன சம்பந்தம் என்பதே இதன் கதைக்களம்.
Consecration (ஆங்கிலம்) – Amazon Prime Video
கிறிஸ்டோபர் ஸ்மித் இயக்கத்தில் ஜெனா மலோன், டேனி ஹஸ்டன், தோரன் பெர்குசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Consecration’. தனது சகோதரரின் மர்மமான மரணத்தின் பின்னணியைக் கண்டறியச் செல்லும் தேவாலயப் பெண், திகைப்பூட்டும் தனது கடந்த காலத்தையும், கொடூரமான சம்பவங்களையும் தெரிந்துகொள்வத்தான் இதன் கதைக்களம். ஹாரர் திரில்லர் திரைப்படமான இது ‘Amazon Prime Video’ தளத்தில் வெளியாகியுள்ளது.
+ There are no comments
Add yours