Karthi 25: “முதலில் டில்லி, அப்பறம் ரோலக்ஸ்!”- லோகேஷ்; “`மெட்ராஸ்’ படத்துல கார்த்தி…”- பா.இரஞ்சித் | Directors Pa.Ranjith, Lokesh Kanagaraj and Siva Speech in Karthi 25 Japan Event

Estimated read time 1 min read

சிறுத்தை சிவா

“எங்க அப்பா அம்மா வச்ச பேரு சிவா. ‘சிறுத்தை’ படம் மூலமாக என் பேருக்கு முன்னாடி ‘சிறுத்தை’ன்னு சேர்த்துக்க வைத்தார். அவர் வேலைக்கு உன்னதமான உழைப்பைப் போடக்கூடிய மனிதர். கார்த்தி சார் என்னை ஆத்மார்த்தமாக நம்பி அந்தப் படத்தைக் கொடுத்தார். ‘சிறுத்தை’ படத்துல ரெண்டு கதாபாத்திரத்தையும் அற்புதமாகப் பண்ணியிருந்தார்!” என்றார் சிறுத்தை சிவா.

சிவா, ஹெச்.வினோத்

சிவா, ஹெச்.வினோத்

ஹெச்.வினோத்

“ராஜூ முருகன் அவர்களின் அரசியல் மற்றும் சமூகப் பார்வைகளை அவரின் முந்தைய படங்களில் பார்த்திருப்போம். ஆனால், ராஜூ முருகன் இயல்பில் ரொம்பவே ஜாலியான நபர். அந்த ஒரிஜினல் ராஜூமுருகனை ‘ஜப்பான்’ படத்தின் மூலம் பார்க்கலாம்!” என்றார் ஹெச்.வினோத்.

கே.எஸ்.ரவிக்குமார்

“கார்த்தியுடன் முன்பே இணைந்து ஒரு படம் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் அப்போது இணைய முடியவில்லை. இப்போது ஒரு நடிகனாக ‘ஜப்பான்’ படத்தில் இணைந்துள்ளேன்!” என்று மகிழ்ச்சியுடன் பேசினார் கே.எஸ்.ரவிக்குமார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours