ஓடிடியின் வருகை பெருகியுள்ளதால், சில படங்கள் திரைக்கு வந்த சில நாட்களிலேயே ஆன்லைன் ஓடிடி தளங்களில் ஸ்டிரீம் செய்யப்படுகின்றன. ஒரு சில படங்கள், நேரடியாகவே வெளியாகின்றன. அந்த வரிசையில் திரைக்கு வந்து ஒரு மாதம் கூட ஆகாத படமான இறுகப்பற்று, ஒரு பிரபல ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளது.
தமிழ் சினிமாவில், பல ஆண்டுகளுக்கு பிறகு வந்த நல்ல ஃபீல் குட் படம் என்ற பெயரினை பெற்றுள்ளது, இறுகப்பற்று திரைப்படம். சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மனங்களின் இடம் பெற்ற இப்படம், நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறுகப்பற்று திரைப்படம்:
தமிழில் வெகு சில படங்களே இயக்கியுள்ளவர், யுவராஜ் தயாளன். இவர் இயக்கத்தில் கடந்த அக்டேபர் 6 ஆம் தேதி வெளியான படம், ‘இறுகப்பற்று’. இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா கபூர், சானிய ஐயப்பன், விதார்த், ஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | ‘லியோ’ படத்தில் நடிக்க பிரியா ஆனந்த வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஓடிடியில் வெளியீடு:
‘இறுகப்பற்று’ திரைப்படம், விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது. வரும் நவம்பர் 3ஆம் தேதி இப்படம் பிரபல ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிள்க்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தளத்திற்கு இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய பயனாளர்கள் உள்ளனர். அதனால் இந்த படத்திற்கு பெரிய அளவில் ரீச் இருக்கும் என கூறப்படுகிறது. குறுகிய பட்ஜெட்டில் உருவாகியிருந்த இப்படம் வசூல் ரீதியாக பெரிய தோல்வியை பெறவில்லை. இந்த படத்துடன் சேர்ந்து இன்னும் இரண்டு படங்கள் வெளியானதால் இப்படத்தை திரையரங்கில் ரசிகர்கள் பார்க்க தவறி விட்டனர்.
நல்ல ஃபீல் குட் படம்..
‘இறுகப்பற்று’ திரைப்படம் வெளியான போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதில், திருமணம் ஆன மூன்று ஜோடிகள் குறித்தும் அவர்களது திருமண வாழ்வில் நிகழும் சம்பவங்கள் குறித்தும் இப்படத்தில் காட்சி படுத்தப்பட்டிருக்கும். தமிழ் சினிமாவில நீண்ட நாட்களுக்கு பிறகு வந்த நல்ல ஃபீல் குட் படம் இது, என்ற வரவேற்பினை இப்படம் பெற்றிருந்தது.
திருமண வாழ்க்கையில் என்ன பிரச்சனை ஏற்பட்டாலும், அதை கணவன்-மனைவியாக சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும் என்பதே இப்படத்தின் மையக்கரு. படத்தின் இசை, பாடல்களும் சரியாக மனதில் பதியவில்லை என்று ரசிகர்கள் மத்தியில் இருந்து நல்ல விமர்சனம் எழுந்தது.
யுவராஜ் தயாளன்:
இறுகப்பற்று படத்தினை இயக்கியிருந்த யுவராஜ் தயாளன், இதற்கு முன்னர் வடிவேலுவை வைத்து இரண்டு படங்களை இயக்கியுள்ளார். ரெட் கார்டு கொடுக்கப்பட்டு கம்-பேக் கொடுத்த போது அவர் நடித்திருந்த படம், தெனாலி ராமன். காமெடி படமாக எடுக்கப்பட்டிருந்தாலும், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் இயக்கிய படம், எலி. இந்த படத்திற்கு விமர்சனங்கள் கூட சரியாக வரவில்லை.
இந்த தோல்விகளில் இருந்து கம்-பேக் கொடுக்க நினைத்த அவர், இறுகப்பற்று படத்தை இயக்கினார். படத்தை பார்த்த பல ரசிகர்கள், “இவரா இந்த படங்களை இயக்கியது…” என வாய்பிளந்தனர்.
மேலும் படிக்க | ‘லியோ’ படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த த்ரிஷா..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours