விஜய் டிவியில் அக்டோபர் 2-ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது பிக் பாஸ் தமிழ் சீசன் 7. நடிகை விசித்ரா, பாடகர் யுகேந்திரன், வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிதா உள்ளிட்ட 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் முதல் வாரம் அனன்யா வெளியேறினார்.
அனன்யா வெளியேறிய மறுநாளே எழுத்தாளர் பவா செல்லத்துரை தானாக விரும்பி வெளியேறினார். பவாவின் எதிர்பாராத வெளியேற்றத்தால் இரண்டாவது வாரம் எவிக்ஷன் இல்லை என அறிவித்தார்கள். தொடர்ந்து மூன்றாவது வாரம் விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார்.
பதினெட்டு பேரில் மூன்று பேர் வெளியேற, தொடர்ந்து 15 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிலிருந்த சூழலில் வைல்டு கார்டு மூலம் மேலும் 5 போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் செல்லவிருப்பதாக புரோமோ வெளியானது.
அந்த வீட்டில் இருக்கும் சில போட்டியாளர்கள் சேனல் எதிர்பார்த்த அளவுக்கு கன்டென்ட் தராமல் ஏனோ தானோவென இருப்பதால்தான் பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக அதிக எண்ணிக்கையில் வைல்டு கார்டு மூலம் போட்டியாளர்களை இறக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
+ There are no comments
Add yours