சென்னை: அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘சித்தா’ படத்தின் இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் அடுத்ததாக ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சித்தா’ படங்களின் இயக்குநர் எஸ்.யு.அருண்குமாருடன் கைகோக்கிறார். இந்தப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ‘சீயான்62’ என தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், பெண் ஒருவர் காவல் நிலையத்தில் அடைக்கலம் தேடி வருகிறார். அவரிடம் காவலர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது விக்ரமின் என்ட்ரி. வேட்டி, சட்டை மீசையுடன் கிராமத்து மனிதராக விக்ரம் ஈர்க்கிறார். இரவுக்காட்சியாக ஓடும் இந்த அறிவிப்பு வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அறிவிப்பு வீடியோ:
+ There are no comments
Add yours