“படத்தோட ஹீரோ முத்தரசன் ஐயாதான்; ஆனா, இன்னொரு பெரிய ஹீரோவும் இருக்காரு!” – இயக்குநர் விஜயகுமார் | Arisi movie director Vijayakumar talks about casting R. Mutharasan in lead role

Estimated read time 1 min read

ஒருபக்கம் இப்படியென்றால், இன்னொரு பக்கம் விவசாய நிலங்களைத் தொழிற்சாலைகளாகவும், பிளாட்டுகளாகவும், அபார்ட்மென்ட்டுகளாகவும் மாற்றிக்கொண்டிருக்கிறோம். இன்னும் சில வருடங்களில் விவசாயம் என்பதே காணாமல் போய்விடும். இந்த அவலத்தையெல்லாம் மையப்படுத்தித்தான், ‘அரிசி’ படத்தை உருவாக்கியுள்ளேன். அரிசி என்பது வெறும் தானியம் மட்டுமே கிடையாது. அது மனித வாழ்வின் உயிர்நாடி. இப்படியொரு கதைக்குத் தொழில்முறை நடிகர்களை நடிக்க வைத்தால், படத்திற்கு நிச்சயம் சினிமாத்தன்மை வந்துவிடும். சமூகத்திற்குச் சொல்ல வந்த கருத்து சேராமல் போய்விடும். அதனால்தான், முத்தரசன் ஐயாவை நடிக்க வைத்தேன்.

அரிசி இயக்குநர் எஸ்.ஏ விஜயகுமார்

அரிசி இயக்குநர் எஸ்.ஏ விஜயகுமார்

அவருக்கும் நடிப்புக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவரை அணுகியபோது முதலில் மறுத்தவர், பின்பு கதையைக் கேட்டதும் ஒப்புக்கொண்டார். சமூகத்திற்கான கதை என்பதால்தான், ஆர்வம் காட்டி நடித்தார். அவர்தான் படத்தின் ஹீரோ. முத்தையன் என்ற கதாபாத்திரத்தில் விவசாயியாகவே வாழ்ந்துள்ளார்.

மொத்தம் 35 நாள்கள் ஷூட்டிங் நடந்தது. பெரிய பெரிய நடிகர்களே பத்து பதினஞ்சு முறை ரீடேக் போவாங்க. ஆனா, 90 சதவிகிதக் காட்சிகளில் முத்தரசன் ஐயா ரீடேக் போகவே இல்லை. ரொம்ப எதார்த்தமா நடிச்சாரு. முத்தரசன் ஐயா 17 வயசுலருந்து பொது வாழ்க்கையில இருக்கிறார். விவசாயிகளுக்காக இப்போதுவரை போராட்டக் களத்தில் நிற்கிறார். விவசாயிகளின் பிரச்னைகள், வலி, வேதனைகள் எல்லாம் அவருக்குத் தெரியும். அதனால், வசனங்களை எளிதாக உள்வாங்கி இயல்பாகப் பேசி நடித்தார். எதிர்பார்த்தது போலவே, காட்சிகளும் சிறப்பாக வந்துள்ளன.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours