`ஜெயிச்சுட்டோம் மாறா!’ – என சூரரைப் போற்று படத்தின் மூலமாக பலரையும் ஈர்த்தது சூர்யா – ஜி.வி.பிரகாஷ் – சுதா கொங்கரா கூட்டணி.
இதையடுத்து ‘சூர்யா 43’-யை சுதா கொங்கரா இயக்குகிறார். ‘சூரரைப் போற்று’ படத்திற்குப் பிறகு சூர்யாவை மீண்டும் இயக்கவிருக்கும் இப்படமும் உண்மைக் கதையை மையமாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் 100வது படம் இதுதான். ஜி.வி.பிரகாஷுக்கு முதல் தேசிய விருதை வாங்கிக் கொடுத்ததும் இதே கூட்டணியில் உருவான ‘சூரரைப் போற்று’ படம்தான். இது தொடர்பான அதிகாரப் பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இதுதவிர இதில் முக்கியமான கதாபாத்திரங்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா நடிக்கவிருக்கிறார்கள். துல்கர் சல்மான் சூர்யாவின் தீவிர ரசிகர் என்பதைப் பல பேட்டிகளில் கூறியிருந்தார். இந்தப் படத்தில் அவர் கமிட்டானதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். துல்கரைப் போலவே இந்தப் படத்தில் நஸ்ரியா நடிப்பதும் ஆச்சரியமான விஷயம்தான். திருமணத்திற்குப் பிறகு சில ஆண்டுகள் நடிக்காமலிருந்தவர் சமீபமாகத்தான் மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். செலக்ட்டிவ்வாக கதைகளைத் தேர்வு செய்து வரும் நஸ்ரியா, இந்தப் படம் மூலம் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு தமிழில் நடிக்கவிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
படத்தின் பாதி டைட்டில் புறநானூறு என்பதாக இருக்கிறது. முன் பாதி டைட்டில் என்னவாக இருக்கிறது என்பதை கமென்ட்டில் தெரிவியுங்கள்!
+ There are no comments
Add yours