`பாவம் கணேசன்' ஷிமோனாவுக்குத் திருமணம்; வாழ்த்திய சின்னத்திரை பிரபலங்கள்!

Estimated read time 1 min read

விஜய் டிவியில் ஒளிபரப்பான `பாவம் கணேசன்’ தொடரின் மூலம் மக்களிடையே பரிச்சயமானவர் ஷிமோனா. இவருக்கும், கிரண் என்பவருக்கும் கோயம்புத்தூரில் உறவினர்கள் முன்னிலையில் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. 

ஷிமோனா – கிரண்

ஷிமோனா கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். சன் டிவியில் ஒளிபரப்பான `நாயகி’ தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர். அடுத்ததாக, `பாவம் கணேசன்’ தொடரில் நடித்திருந்தார். அதன் பிறகு சீரியலில் அவரைப் பார்க்க முடியவில்லை. அதன் பிறகு அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நிறுவனத்தில் பணியில் இருப்பது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், அவர் தன் ரசிகர்களுக்குத் தனக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதை அறிவித்திருந்தார். தொடர்ந்து திருமணம் குறித்த தகவல்களையும் தெரிவித்தார். அவருடைய திருமணத்திற்கு சில சின்னத்திரை நடிகர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார். அனைவரின் வாழ்த்துகளுடன் இன்று அவருக்குத் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

ஷிமோனா

`பாவம் கணேசன்’ தொடர் நடிகர்கள் அவருடைய மீடியா நண்பர்கள் அவருடைய திருமணத்தில் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது. மீடியாவை விட்டு சமீபமாக விலகி இருந்தாலும் `பாவம் கணேசன்’ ப்ரியாவாக இன்றும் மக்கள்மனதில் தனக்கென ஓர் இடத்தை இறுகப் பற்றிக் கொண்டுள்ளார் ஷிமோனா. அவரது திருமணத்திற்கு அவருடைய ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

வாழ்த்துகள் ஷிமோனா – கிரண்!

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours