தெலுங்கில் நடிகராக செல்வராகவன் அறிமுகம் – ரவிதேஜாவுடன் கைகோக்கிறார்! | Selvaraghavan makes his debut as actor in Telugu with Ravi Teja

Estimated read time 1 min read

இயக்குநர் செல்வராகவன் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன்மூலம் தெலுங்கில் அவர் நடிகராக கால் பதிக்கிறார்.

கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ உள்ளிட்ட பல முக்கியமான படங்களை உருவாக்கியவர் கடைசியாக தனுஷை வைத்து ‘நானே வருவேன்’ (2022) படத்தை இயக்கியிருந்தார். தொடர்ந்து இயக்குநர் செல்வராகவனுக்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு நடிப்பில் இறங்கி, ‘பீஸ்ட்’, ‘சாணிக்காயிதம்’, ‘பகாசூரன்’, ‘ஃபர்ஹானா’, ‘மார்க் ஆண்டனி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இந்நிலையில், தற்போது இவர் தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார். நடிகர் ரவிதேஜா, இயக்குநர் கோபிசந்த் மாலினேனி கூட்டணியில் உருவாகும் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது தனுஷ் இயக்கி வரும் ‘டி50’ படத்திலும் செல்வராகவன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours