லியோ திரைப்படத்தின் எட்டாவது நாள் வசூல் நிலவரம்: லியோ திரைப்படம் வெளியான முதல் வார முடிவில் இப்படம் உலகளவில் 461+ கோடிகள் வசூல் செய்திருக்கிறது. 2023 ஆம் ஆண்டின் இதுவரை வெளியான திரைப்படங்களில் லியோ படத்தின் முதல் வசூல் முதலிடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறது.
லியோ திரைப்படம்:
‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு தளபதி விஜய் (Actor Vijay) மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள இரண்டாவது படமான லியோவும் வெற்றி ஹிட் அடித்துள்ளது. இந்த படத்தின் திரைக்கதையை லோகேஷ், ரத்ன குமார் மற்றும் தீரஜ் வைத்தி எழுதியுள்ளனர். விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, மிஷ்கின், சாண்டி மற்றும் கவுதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் லியோ படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. லியோ (Leo Movie) படம் கைதி (2019) மற்றும் விக்ரம் (2022) ஆகிய படங்களின் தொடர்ச்சிகளை கொண்ட லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாகும். லியோ படம் விஜய்யின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. வழக்கமான விஜய் படங்களை போன்று அறிமுக பாடல், சண்டைக்காட்சி இல்லாத முற்றிலும் வித்தியாசமான படமாக லியோ இருந்தது.
மேலும் படிக்க | ஜெய் – அருண்ராஜா கூட்டணியில் லேபிள் வெப் சீரிஸ்! சிறப்பம்சங்கள் என்ன?
லியோ படத்தின் முதல் நாள் முதல் ஆறாம் நாள் வரை வசூல் நிலவரம்:
இதனிடையே இந்திய அளவில் லியோ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 148.5 கோடி ரூபாய் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இரண்டாவது நாளில் ரூ.35.25 கோடியும், மூன்றாவது நாளில் ரூ.39.8 கோடியும், நான்காவது நாளில் ரூ.41.55 கோடியும், ஐந்தாவது நாளில் ரூ.35.19 கோடி வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. ஆறாவது நாளில் (Leo Box Office Collections) இந்தியாவில் இந்தத்திரைப்படம் 250 கோடியை தாண்டி வசூல் செய்திருக்கிறது. அதன்படி 2023 ஆம் ஆண்டின் இதுவரை வெளியான திரைப்படங்களில் லியோ படத்தின் முதல் வசூல் முதலிடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறது.
லியோ படத்தின் முதல் வார வசூல் நிலவரம்:
இந்நிலையில் லியோ திரைப்படம் வெளியான முதல் வார முடிவில் இப்படம் உலகளவில் 461+ கோடிகள் வசூல் செய்திருக்கிறது என இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் எந்த தமிழ் படமும் படைக்காத ஒரு பிரமாண்ட சாதனையை லியோ படம் படைத்துள்ளது. அதன்படி கடந்த 7 நாட்களில் லியோ படம் உலகளவில் ரூ. 455 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் புதுப்புது சாதனைகளை படைத்து வருகிறது.
Appadi Podu pic.twitter.com/5eMWC4LRqU
— Trish (@trishtrashers) October 26, 2023
8 ஆம் நாள் வசூல் நிலவரம்:
சாக்னில்க்கின் கூற்றுப்படி, லியோ இந்தியா முழுவதுலும் 8வது நாளில் (Leo Box Office Collections Day 8) ரூ 11 கோடி வசூல் செய்ய வாய்ப்புள்ளதால் மதிப்பிடப்பட்டுள்ளது.
#LeoFilm completes extended first week –
All India Estimates (Day 8) – 10.25 Cr Net/12 Cr Gross (+/-)
8 Days Worldwide Collection – 480 Cr +/- (UPDATED)#LeoBoxOffice | #LeoBlockbuster | #ThalapathyViiay
— Sacnilk Entertainment (@SacnilkEntmt) October 26, 2023
லியோ படத்தின் OTT வெளியீடு:
இதற்கிடையில் லியோ திரைப்படம் திரையரங்கில் வெளியாகி இன்னும் 7 நாட்களே ஆகியுள்ள நிலையில், தற்போது வரும் நவம்பர் 4வது வாரத்தில் லியோ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் முன்னணி ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் லியோ படத்தின் டிஜிட்டல் உரிமையைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மலை போல் காசை குவித்து வைத்திருக்கும் த்ரிஷா.. சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours