ரஜினிக்கு கருங்கல் சிலை வைத்த ரசிகர்
27 அக், 2023 – 10:30 IST
திருமங்கலம் : மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த முன்னாள் துணை ராணுவப்படை வீரர் கார்த்திக். தற்போது திருமண தகவல் மையம் நடத்தி வருகிறார். தீவிர ரஜினி ரசிகரான இவர் ரஜினியின் அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து ஜெயிலர் வரை அனைத்து படங்களின் போஸ்டர்களை சேகரித்து தனது வீட்டின் ஒரு அறையில் வைத்து உள்ளார்.
இந்நிலையில் ரஜினிக்கு 250 கிலோவில் மூன்று அடி உயரத்தில் கருங்கல்லினால் ஆன சிலையை நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து செய்து வாங்கி வந்துள்ளார். நேற்று அந்த சிலையை வீட்டில் வைத்து அதற்கு ஹோமம் வளர்த்து, அபிஷேகம், ஆராதனை பூஜைகள் செய்தார். இந்த நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் கலந்து கொண்டனர்.
+ There are no comments
Add yours