அந்த வரிசையில் அவரது கார் கலெக்ஷனில் புதிதாக இடம்பெற்றிருக்கிறது ரூ.4 கோடி மதிப்பிலான சிவப்பு லம்போர்கினி ஹூரகன் டெக்னிகா. இதுதான் தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையாகி வருகிறது.
நடிகை ஷ்ரத்தா கபூர், தனது புதிய காரை வாங்கிய கையோடு மும்பையிலிருக்கும் இஸ்கான் கோவிலுக்குச் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வைரலாகின.
இந்நிலையில் 2019-ல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான மும்பை ஆரே காலனியில் மெட்ரோ அமைப்பதற்கு எதிராகப் போராடினார் ஷ்ரத்தா கபூர். அங்கு இருக்கும் மரங்களை வெட்டக்கூடாது, சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்று பதாகை ஏந்தி கோஷமிட்டார்.
நெட்டிசன்கள் தற்போது இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு, “சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்று போராடும் “ஷ்ரத்தா கபூர்’ ஒற்றை இலக்கத்தில் மைலேஜ் தரும் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் டீசல் ‘லம்போர்கினி ஹூரகன் டெக்னிகா’ காரை வாங்கியது சரியா?” என்று ட்ரோல் செய்து வருகின்றனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
+ There are no comments
Add yours