சினிமா நடிகர் ஆனார் கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன்

Estimated read time 1 min read

சினிமா நடிகர் ஆனார் கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன்

25 அக், 2023 – 12:12 IST

எழுத்தின் அளவு:


Mutharasan-of-the-Communist-Party-became-a-film-actor

பொதுவாக திராவிட கட்சியின் தலைவர்கள், அவர்களது வாரிசுகளுக்குத்தான் சினிமாவில் நடிக்கும் ஆசை இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கே நடிக்கும் ஆசை வந்து விட்டது. கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் மகேந்திரனின் மகன் சினிமாவில் நடித்தார். தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசனும் சினிமா நடிகராகி விட்டார்.

மோனிகா புரொடக்ஷன் சார்பில் பி.சண்முகம் தயாரிக்கும் படம் ‘அரிசி’. இந்த படத்தில்தான் முத்தரசன் நடிக்கிறார். இதில் அவர் விவசாயியாக நடிக்கிறார். அவரது மனைவியாக ரஷ்யா மாயன் நடிக்கிறார். இவர்களுடன் சிசர் மனோகர், கோவி இளங்கோ, ராஜா திருநாவுக்கரசு, அர்ஜுன் ராஜ், மகிமை ராஜ், வையகன், அன்பு ராணி, சுபா, பழனி மணிசேகரன், ராதாகிருஷ்ணன் உள்பட பலர் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கிறார். ஜான்சன் ஒளிப்பதிவு செய்கிறார்.

எஸ்.ஏ.விஜயகுமார் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது “முழுக்க விவசாய பின்னணியில் உருவாகும் படம். அரிசி என்பது வெறும் உணவு தானியம் மட்டும் அல்ல, மனித வாழ்வியலின் உயிர் நாடி என்பதனை இத்தலைமுறைக்கு எடுத்து சொல்வதே இந்த படத்தின் நோக்கம். இந்த படத்தில் முத்தரசன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து அவரிடம் கதை சொன்னபோது கதைக்காக இந்த ஒரு படத்தில் மட்டும் நடிக்கிறேன் என்று சொல்லி ஒப்புக் கொண்டார்.

இளம் வயதில் அவர் தெரு நாடகங்களில் நடித்த அனுபவம் கொண்டவர் என்பதால் இயல்பாக நடித்தார். அவர் பேசும் ஒவ்வொரு வசனங்களும் அர்த்தம் நிறைந்ததாக இருக்கும். இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் பகுதியில் குடவாசல் அருகே உள்ள சிறு சிறு கிராமங்களில் 35 நாட்கள் நடந்து முடிந்திருக்கிறது. அப்பகுதி விவசாயிகளும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்” என்றார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours