இந்தக் கொலைகளை விசாரிக்கத் தனியார் துப்பறியும் நிபுணர்கள், அரசு அதிகாரிகள், காவல் அதிகாரிகள் எனப் பலர் வருகிறார்கள். அவர்கள் அனைவரையுமே வில்லியம் ஹேலியும் எர்னெஸ்ட் புகார்ட்டும் தடயங்களின்றி கொலை செய்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து ஓசேஜ் மக்களின் தொடர் புகார்களுக்குப் பிறகு அரசாங்கம் இந்த வழக்கில் தலையிட்டு சில முன்னெடுப்புகளை எடுக்கிறது. அதன் பிறகு இந்த வழக்கு FBI-யின் கைகளுக்குச் செல்கிறது. இதனைத் தொடர்ந்து FBI இந்த வழக்கில் தீவிரமாகத் தலையிட்டு வில்லியம் ஹேலியும், எர்னெஸ்ட் புகார்ட்டும்தான் குற்றவாளி, இந்த இருவரும்தான் பல கொலைகளைச் செய்திருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கிறது. இதுதான் வரலாறு சொல்லும் உண்மைச் சம்பவம்.
+ There are no comments
Add yours