உலக அளவில் டிகாப்ரியோ படத்தை பின்னுக்குத் தள்ளிய விஜய்யின் ‘லியோ’ | Leo Beats Leonardo DiCaprio Killers of the Flower Moon

Estimated read time 1 min read

சென்னை: லியோனார்டோ டிகாப்ரியோ நடித்துள்ள ‘தி கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன்’ படத்தை பின்னுக்குத் தள்ளி விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் நான்கு நாட்களில் 48.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது.

மார்ட்டின் ஸ்கார்செஸி இயக்கத்தில் லியானார்டோ டிகாப்ரியோ, ராபர்ட் டி நிரோ நடித்துள்ள படம் ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்’. 2017ஆம் ஆண்டு இதே பெயரில் டேவிட் கிரென் என்பவர் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. 1920களில் அமெரிக்காவின் ஓசேஜ் நேஷன் என்ற பழங்குடியின நிலத்தை அதன் எண்ணெய் வளத்துக்காக கைப்பற்றிய அமெரிக்கர்கள், அங்கு நிகழ்த்திய தொடர் கொலைகளைப் பற்றி இப்படம் பேசுகிறது. உலகம் முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் கடந்த 20ஆம் தேதி பல்வேறு நாடுகளில் வெளியானது. இப்படம் இந்தியாவில் வரும் 27ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில், இப்படம் உலகம் முழுவதும் 44 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. இப்படத்தின் வசூலை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் முந்தியுள்ளது. இப்படம் உலக அளவில் 48.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளதாக திரைப்படங்களின் வசூல் குறித்து புள்ளிவிவரங்களை வெளியிடும் காம்ஸ்கோர் தளம் தெரிவித்துள்ளது. இதனை முன்னணி அமெரிக்க ஊடகமான வெரைட்டி தளமும் உறுதி செய்துள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் கடந்த அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் படம் உலக அளவில் 4 நாட்களில் ரூ.400 கோடி வசூலித்துள்ளதாக நேற்று (அக்.24) படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours