2019-ல் ‘பிரம்மாஸ்திரா’ எனும் படத்தில் இணைந்து நடித்து காதல் ஜோடிகளான ரன்பீர் – ஆலியா, 5 வருடங்களாகக் காதலித்து கடந்த ஏப்ரல் 14ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு ‘ரஹா’ எனும் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே ஆலியா படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். தன் மனைவியின் கனவுகளைப் புரிந்து கொண்டு ரன்பீர், 6 மாதங்களுக்குப் படங்களில் ஏதும் நடிப்பதில்லை என்று தீர்மானித்து ரஹாவைப் பார்த்துக் கொள்கிறார்.
அதுமட்டுமின்றி ஆலியா பட், அல்லு அர்ஜுன் இருவரும் சிறந்த நடிபிற்கான தேசிய விருதினையும் அண்மையில் பெற்றிருந்தனர். இதற்காக ஆலியா-ரன்பீர் இருவரும் ஜோடியாக விருது விழாவிற்குச் சென்ற க்யூட்டான புகைப்படங்கள் வைரலாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது நேர்காணல் ஒன்றில் பேசிய ரன்பீர் கபூர், அல்லு அர்ஜுன் குறித்தும் ஆலியா பட் லிப்ஸ்டிக் போட்டால் பிடிக்காது என்று கூறிய சர்ச்சைகள் குறித்தும் பேசியுள்ளார்.
இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய ரன்பீர், தேசிய விருது பெற்ற அல்லு அர்ஜுன் குறித்து, ” ‘புஷ்பா’ படம் பார்த்தப் பிறகு அல்லு அர்ஜூனின் ரசிகனாகிவிட்டேன். அல்லு அர்ஜுனின் மிகப்பெரிய ரசிகன் நான். புஷ்பா கதாப்பத்திரத்தை அவரைத் தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது” என்று கூறினார்.
இதையடுத்து ஆலியா பட் குறித்தும் சில சர்ச்சைகளும் குறித்துப் பேசிய ரன்பீர், “ஆலியா திறமையான, தன் கனவை நோக்கிக் கடுமையாக உழைக்கும் பெண். அவரைபோல கடுமையாக உழைக்கும் பெண்ணை நான் என் வாழ் நாளில் பார்த்ததேயில்லை. அதுதான் அவரை இன்னும் பெரிய உயரத்திற்குக் கொண்டு சென்றுகொண்டே இருக்கிறது.
குழந்தையை நான்தான் பார்த்துக் கொள்கிறேன். அதற்காகவே இன்னும் 6 மாதங்களுக்குப் படங்களில் நடிப்பதைத் தள்ளிவைத்துள்ளேன். என் மகள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகப் பேச ஆரம்பித்திருக்கிறாள். என் மகளிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்” என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.
இதற்கிடையில் ஒரு நேர்காணலில் ரன்பீர் பற்றி பேசிய ஆலியா பட், “காதலிக்கும்போதும் சரி, இப்போதும் சரி ரன்பீர் அடிக்கடி என்னிடம் சொல்வது ‘லிப்ஸ் டிக்கை அழி…லிப்ஸ் டிக்கை அழி’ என்பதுதான். ரன்பீருக்கு நான் அதிகமாக மேக்கப் போட்டோலோ, உதட்டிற்கு லிப்ஸ்டிக் போட்டாலோ பிடிக்காது. நான் லிப்ஸ்டிக், மேக்கப் இல்லாமல் இயல்பாக இருந்தால்தான் ரன்பீருக்குப் பிடிக்கும்” என்றார்.
இது சமூகவலைதளங்களில் வேறு விதமாகப் பரவி, ‘ரன்பீர் டாக்ஸிக்கானவர், ஆலியா பட்டை ஆதிக்கத்துடன் கையாளுகிறார். அவர் ஒரு ஆதிக்கவாதி’ என்று சர்ச்சைகள் கிளப்பின.
இந்நிலையில் தற்போது இது குறித்து மனம் திறது பேசியுள்ள ரன்பீர், “நான் எப்படிப்பட்டவன், என் குணம் என்ன என்று யாருக்கும் தெரியாது. சினிமாவில் நடிக்கும் கதாபாத்திரங்கள், சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை வைத்து ‘நான் இப்படித்தான் இருப்பேன்’ என்று நல்லவனாகவும், கெட்டவனாகவும் கற்பனை செய்து கொள்கிறார்கள். உண்மையில் நான் எப்படிப்பட்டவன் என்று என்னுடன் இருப்பவர்களுக்குத்தான் தெரியும்.
என்னைப் பற்றி சமூகவலைதளங்களில் பரவும் வதந்திகள் ஏராளாம். அதற்கெல்லாம் பதில் சொல்வது கடினம். ‘நான் ஒரு டாக்ஸிக்கானவன்’ என்று இணையதளத்தில் வெளியானக் கட்டுரை ஒன்றை படித்தபோது எனக்கு வருத்தப்படுவதைத்தவிர வேறென்ன செய்யவதென்று தெரியவில்லை. நான் மக்களுக்குச் சொந்தமாகிவிட்டேன். என்னைப் பற்றி விமர்சிக்கவும், கருத்துச் சொல்வதற்கும் அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours