கமல் – ஹெச்.வினோத் படத்துக்கு தலைப்பு ‘தலைவன் இருக்கின்றான்’? | Kamal Haasan movie with H Vinoth to be titled Thalaivan Irukkindran

Estimated read time 1 min read

சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்துக்கு ‘தலைவன் இருக்கின்றான்’ என்று பெயர் வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ படத்துக்குப் பிறகு கமல்ஹாசனின் 233-வது படத்தை ஹெச்.வினோத் இயக்க உள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. அரசியல் கதைகளத்தைக் கொண்ட இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என்று தெரிகிறது. இந்தச் சூழலில் இப்படத்துக்கு ‘தலைவன் இருக்கின்றான்’ என்று தலைப்பு வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதே தலைப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படத்தை இயக்கி நடிக்க கமல்ஹாசன் திட்டமிட்டிருந்தார். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருந்தார். வடிவேலு இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். ஆனால் இப்படம் பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டது. இந்த சூழலில் அந்த தலைப்பை மட்டும் இப்படத்துக்கு பயன்படுத்த கமல் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்துக்குப் பிறகு கமல் நடிக்கும் 234வது படத்தை மணிரத்னம் இயக்க உள்ளார். இப்படத்தின் புரோமோஷன் டீசர் வரும் நவம்பர் 7 கமல் பிறந்தநாளன்று வெளியாக உள்ளது. இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours