ஆமீர் கான் தன் குடும்பத்தின் மீது அதிக பற்றுதல் உள்ளவர். அதுவும் தனது தாயார் மீது அதிக பாசமுடையவர். அவரது தாயார் ஜூனத் உசேனுக்கு தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து அவரை அருகில் இருந்து கவனித்துக்கொள்ள ஆமீர் கான் முடிவு செய்திருக்கிறார். இதற்காக தற்காலிகமாக சென்னைக்கு மாற்ற முடிவு செய்துள்ளார். மருத்துவமனை அருகில் உள்ள ஹோட்டலில் இரண்டு மாதங்கள் தங்க முடிவு செய்துள்ளார்.
அருகில் இருந்தால் உடனுக்குடன் தாயாரை கவனித்துக்கொள்ளலாம் என்று இம்முடிவை எடுத்துள்ளார். கடந்த ஆண்டு ஆமீர் கான் தாயார் பஞ்ச்கனியில் இருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை அங்கிருந்து மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை கொடுத்தார். இந்நிலையில் தற்போது அவரின் சிகிச்சைக்காக சென்னைக்கு வந்துள்ளனர்.
+ There are no comments
Add yours