வெப்சீரிஸில் அடியெடுத்து வைத்த நிவின்பாலி
21 அக், 2023 – 12:55 IST
சமீபகாலமாக திரைப்படங்களுக்கு இணையாக வெப்சீரிஸ்களும் வரவேற்பை பெற்று வருவதால் பல இளம் நடிகர்கள் தங்களது கவனத்தை வெப்சீரிஸ் பக்கம் திருப்பி உள்ளனர். அந்த வகையில் மலையாள இளம் முன்னணி நடிகரான நிவின்பாலியும் வெப்சீரிஸில் அடியெடுத்து வைத்துள்ளார். பார்மா என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த வெப்சீரிஸை மலையாள இயக்குனர் பி ஆர் அருண் என்பவர் இயக்குகிறார்.
இதில் நடிப்பதன் மூலம் ஒரு மிக பெரிய இடைவெளிக்குப் பிறகு பாலிவுட் நடிகர் ரஜித் கபூர் மலையாள திரையுலகிற்கு திரும்பியுள்ளார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பும் விதமாக இந்த வெப்சீரிஸ் தயாராகிறது.
சமீப காலமாக நிவின்பாலியின் படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறாத நிலையில் அவர் இப்படி வெப்சீரிஸ் பக்கம் புத்திசாலித்தனமாக தனது பார்வையை திருப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
வரவிருக்கும் படங்கள் !
- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
- தேவதாஸ்
- நடிகர் : உமாபதி
- நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
- இயக்குனர் :மகேஷ்.ரா
- எங் மங் சங்
- நடிகர் : பிரபுதேவா
- நடிகை : லட்சுமி மேனன்
- இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
- கள்ளபார்ட்
- நடிகர் : அரவிந்த் சாமி
- நடிகை : ரெஜினா
- இயக்குனர் :ராஜபாண்டி
Tweets @dinamalarcinema
+ There are no comments
Add yours