Bigg Boss 7 Day 19: சொதப்பித் தள்ளிய யுகேந்திரனின் ஐடியா; பிக் பாஸையே லெப்ட்டில் டீல் செய்த பிரதீப்! | Bigg Boss Tamil Season 7 Day 19 Episode 20 Highlights

Estimated read time 1 min read

‘பாவம்ப்பா எங்க கேப்டன். ரொம்ப அழ விடாதீங்க’

கேப்டனின் ‘திடீர்’ அட்ராசிட்டி காரணமாக, சின்ன வீட்டு மக்கள் உணவுப் பொருள்களை பதுக்க ஆரம்பிக்க, “நானே உள்ளே வந்து செக் பண்ணுவேன். நீங்களா கொண்டு வந்து எல்லாத்தையும் திருப்பிக் கொடுத்துடுங்க” என்று அதிரடி மாஸ்டராக மாற முயன்றார் யுகி. ஆனால் அது நடக்கவில்லை. மாயா சிரித்து சிரித்து வெறுப்பேற்றி யுகேந்திரனைக் காண்டாக்கினார். கூடவே பூர்ணிமாவும். “வர்ற கோபத்துக்கு நான் அடுத்து என்ன செய்யப் போறேன்னு தெரியுமா?” என்று கோபம் அடைந்தார் யுகேந்திரன். ஏதோ வித்தியாசமாக செய்யப் போகிறார் என்று பார்த்தால், அடாவடியாக வாங்கிய பொருள்களையெல்லாம் அப்படியே சின்ன வீட்டாரிடம் திருப்பியளித்து விட்டார். (இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்!).

“பாவம்ப்பா எங்க கேப்டன்… அவரை ரொம்ப அழ வைக்காதீங்க” என்று மாயாவிடம் விசித்ரா கெஞ்ச வேண்டியிருந்தது. “அவங்களை ஏன் மன்னிச்சு விட்டீங்க… மறுபடியும் வெறுப்பேத்துவாங்க… நீங்க என்ன அவங்க பக்கம் இருக்கீங்க?” என்று யுகேந்திரனிடம் ஜோவிகா கேள்வி கேட்க, மத்தளம் மாதிரி இருபக்கமும் அடிவாங்கினார் கேப்டன். “இனிமே Prank-ன்னு எதையாவது ஆரம்பிப்பியா. கன்டென்ட் கொடுக்கலாம்ன்னு பார்த்தா என்னையே கன்டென்ட் ஆக்கிட்டாங்களே” என்று யுகேந்திரன் உள்ளுக்குள் கதறியிருப்பார்.

மக்களுக்கு உணவு அளித்து தாயாக இருந்து அரவணைக்கும் பிக் பாஸ், அடுத்ததாக புதிய உடையையும் அளிக்க முன்வந்தார். ஒரே உடையை இரண்டு நாள்களாக அணிந்திருக்கும் பெரிய வீட்டாருக்கு ஒரு ஆசுவாசம். (ஆனால் செலவு அவருதில்ல. ஸ்பான்ஸர்ஸ்!). எனவே ஒரு விளம்பர இடைவேளை மிக சாமர்த்தியமாக நிகழ்ச்சிக்குள் நுழைக்கப்பட்டது. ஃபேஷன் ஷோ!

பூர்ணிமா – விஷ்ணு ஜோடியின் ‘ராம்ப் வாக்’ நன்றாக இருந்தது. மணியும் ரவீனாவும் ஜோடியாக நடந்து வந்த போது கேமரா ஐஷூவின் முகத்தில் ஜூம் வைத்தது. இதைப் போலவே விஜய் மற்றும் ஐஷூ நடந்த போது மாயாவின் க்ளோசப் காட்டப்பட்டது. (இந்த மாதிரி கோர்த்து விடுகிற விஷயங்களையெல்லாம் பிக் பாஸ் டீம் சிறப்பாகவே செய்யும்!).

வினுஷாவுடன் ‘வாக்’ வந்த சுரேஷ் வழக்கம் போல் பல கொனஷ்டைகளைச் செய்தார். வினுஷாவைத் தூக்கிக் கொண்டு நடந்தார். பாக்கெட்டில் இருந்து வோ்க்கடலைத் தோலை எடுத்து காற்றில் ஊதினார். துணிக்கடை கட்டைப்பையை தூக்கிப் பிடித்தபடி வந்தார். மைக்கைக் கழற்றி மாலையாக சுழற்றினார்.

இந்தப் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பூர்ணிமா – விஷ்ணு ஜோடியின் ‘வாக்’ பாராட்டப்பட்டாலும் ‘கிரியேட்டிவிட்டியுடன்’ வித்தியாசமாக செய்த சுரேஷ் – வினுஷாவிற்கு பரிசு அளிப்பதாக அறிவித்தார் விசித்ரா. “தேங்க்யூ பிக் பாஸ்… நன்றி… இது நான் அடைந்த முதல் வெற்றி… தேங்க்யூ…” என்று ஹைடெசிபலில் வெறி பிடித்தது போல் கத்திய சுரேஷ், அதே கொலைவெறியுடன் விசித்ராவின் தோளைப் பிடித்து உலுக்க அவர் பயந்து தள்ளிச் சென்றார். நளினமான ஸ்டைலில் நடந்து வந்த பூர்ணிமா – விஷ்ணு ஜோடிக்குப் பரிசளித்திருக்கலாம்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours