Police Arrested Who Selling Leo Ticket High Price | லியோ டிக்கெட் அதிக விலைக்கு விற்பனை.. சிக்கிய 3 பேர் “சிறைக்கு அனுப்பிய காவல்துறை”

Estimated read time 1 min read

Leo Movies Updates: தாம்பரம், குரோம்பேட்டை பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலை வைத்து ஒரு டிக்கெட் 1500 ரூபாய் என்று விற்பனை செய்து வந்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னையை அடுத்த தாம்பரம் வித்யா திரையரங்கம்  மற்றும் குரோம்பேட்டை வெற்றி திரையரங்கம்  உள்ளிட்ட திரையரங்குகளில் லியோ படம் வெளியாகியது. அப்பொழுது திரையரங்கிற்கு வெளியே நின்று கொண்டு இளைஞர்கள் சிலர் அரசு நிர்ணயித்த விலையை விட, கூடுதல் விலையாக 1500 ரூபாய்க்கு  டிக்கெட் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அதிக விலைக்கு டிக்கெட் விற்றவர்களை பிடித்து விசாரணை செய்தனர். 

லியோ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்பனை

அப்போது போலீசார் விசாரணையில் தாம்பரம் வித்யா திரையரங்கில் லியோ படத்தின் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்றவர்கள் படப்பை பகுதியை சேர்ந்த கார்த்திக் மற்றும் முடிச்சுர் பகுதியை சேர்ந்த லோகேஷ் என்பதும் தெரிய வந்தது. அதன் பின்னர் அதே போல குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்தது வேளச்சேரியை சேர்ந்த தேவா என்பதும் தெரிய வந்தது.

மேலும் படிக்க – லியோ LCUல் இருக்கா? இல்லையா? திரைவிமர்சனம் இதோ!

லியோ டிக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார்

இந்நிலையில் போலீசார் விசாரணையின் போது மூவரும் வெவ்வேறு இடங்களில் உள்ள திரையரங்கில் அதிக விலைக்கு லியோ பட டிக்கெட்டை ரசிகர்களுக்கு விற்பனை செய்து  வந்தது உறுதியானதையடுத்து அவர்கள் மேல் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பட்டு சிறைக்கு அனுப்ப பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ஆறு லியோ டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்

மீண்டும் இணைந்த தளபதி விஜய் – லோகேஷ் கனகராஜ் 

மெகா ஹிட் மாஸ்டர் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக மீண்டும் லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி விஜய் இணைந்து உருவாக்கிய படம் தான் லியோ. இன்று உலகம் முழுவதும் லியோ படம் வெளியிடப்பட்டது. விஜய்-லோகேஷ் கனகராஜ் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது, காரணம் விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றி. மேலும் படத்தின் டைட்டில் தொடங்கி படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்கள் வரை படத்தின் மீதான எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் சென்றது. 

மேலும் படிக்க – ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா லியோ? டிவிட்டர் விமர்சனம் இதோ!

லியோ பட நடித்தவர்களின் விவரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய், திரிஷா, கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ் என பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

லீக்கான லியோ படத்தின் காட்சிகள்

லியோ படத்தின் முதல் பாதியில் வரும் சில காட்சிகள் டிவிட்டர் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது. அர்ஜூனிற்கும் விஜய்க்கும் இடையேயான சண்டை காட்சிகள், விஜய் மிருகத்துடன் சண்டை போடும் காட்சி, இடைவேளையின் போது விஜய் வரும் காட்சிகள் என பல காட்சிகள் வீடியோக்களாக லீக் செய்யப்பட்டது. அவற்றை வெளியிட்டவர்களின் டிவிட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டு உள்ளன. மேலும் லீக்கான லியோ படத்தின் காட்சிகள் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன. 

மேலும் படிக்க – இணையத்தில் லீக் ஆன ‘லியோ’ படம்..! அதிர்ச்சியில் படக்குழுவினர்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours