1980களில் தமிழ் திரையுலகில் ‘டாப்’ நடிகையாக இருந்தவர், ராதா. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் கார்த்திகா ‘கோ’ படம் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானார்.
ராதாவிற்கு இரண்டு மகள்கள்!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் நடித்து பிரபலமானவர், ராதா. கோலிவுட்டின் அப்போதைய ஹிட் இயக்குநர்களின் ஃபேவரட் ஹீரோயினாக இருந்தவர் ராதா. இவருக்கு கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் என இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். இதில், கார்த்திகா நாயர், 2011ஆம் ஆண்டு வெளியான ‘கோ’ படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார். இளைய மகள் துளசி, மணி ரத்னம் இயக்கிய ‘கடல்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டார்.
திரையுலகை விட்டு விலகல்:
கோ படத்தில் நடித்த கார்த்திகாவிற்கு தமிழ் ரசிகர்கள் நல்ல வரவேற்பினை கொடுத்தனர். எப்போதும் தமிழ் சினிமாவின் தலைக்காட்டும் க்யூட் நாயகிகள் போல இல்லாமல் முதல் படத்திலேயே துணிச்சல் மிகு பத்திரிக்கையாளர் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் நடிக்க வருவதற்கு முன்னரே 2009ஆம் ஆண்டில் ‘ஜோஷ்’என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இவர் மலையாளத்தில் நடித்திருந்த ஒரு படமும் ஹிட் ஆனது. அதன் பிறகு இவரை தேடி, அழுத்தமான கதாப்பாத்திரங்களுடன் கூடிய கதைகள் வந்தன. ஆனால் என்ன காரணத்திற்காகவோ அவர் 2015ஆம் ஆண்டிற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.
தற்போது என்ன செய்கிறார்?
கார்த்திகா நடித்துக்கொண்டிருக்கும் போதே மும்பையில் உள்ள லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் என்ற கல்லூரியில் தொழில்முறை பட்டப்படிப்பை படித்தார். தற்போது அவர் படங்களில் நடிக்காமல் இருப்பதால், அவரது தந்தையின் தொழில்களை கவனித்து வருவதாக கூறப்படுகிறது. திரையுலகில்தான் ஆக்டிவாக இல்லையே தவிர, கார்த்திகா தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கிறார். வெளி நாடுகளுக்கு வெக்கேஷன் செல்வது, அவ்வப்போது குடும்பத்தினருடன் இருந்த மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வது என்றிருக்கிறார்.
மேலும் படிக்க | பிரபல இளம் நடிகையை திருமணம் செய்யும் விஷால்..! எப்போ கல்யாணம் தெரியுமா..?
திருமணமா..?
தமிழ் நடிகைகள் குறித்து அவ்வப்போது திருமண வதந்திகள் உண்டு. ஆனால் திரையுலகை விட்டு விலகியவர்கள் அவர்களாகவே திருமணம் குறித்த செய்திகளை வெளியிட்டால் மட்டும்தான் வெளியில் தெரியும். அந்த வகையில் கார்த்திகாவும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கையில் மோதிரத்துடன் யாரோ ஒரு ஆணை கட்டிப்பிடித்திருப்பது போன்ற அந்த புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த போட்டோவிற்கு ரசிகர்கள் பலர் லைக்ஸ்களை குவித்தும், கமெண்டுகளில் வாழ்த்துகளை தெரிவித்தும் வருகின்றனர்.
மாப்பிள்ளை யார்?
நடிகை கார்த்திகாவின் காதல் யார் என்ற தகவலை அவரே சில நாட்களுக்குள்ளாக தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புறமிருக்க, அந்த நபர் கார்த்திகாவின் நீண்ட நாள் நண்பர் என்றும் இவர்கள் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பினை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.
ஒரே கதாநாயகனுடன் சேர்ந்து நடித்த அக்காள்-தங்கை:
கார்த்திகா, தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்த புதிதில் அவர் ஜோடி சேர்ந்த நாயகன், ஜீவா. இவருக்கும் கார்த்திகாவிற்குமான கெமிஸ்டிரி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனது. ஆனாலும், இவர்கள் இருவரும் வேறு எந்த படங்களிலும் இணைந்து நடிக்கவில்லை. இதையடுத்து நடிக்க வந்த கார்த்திகாவின் தங்கை துளிசி நாயர், ‘யான்’ என்ற படத்திலும் அவருடன் ஜீவாவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். ஆனால், அக்காவின் படம் ஹிட் ஆக, தங்கையின் படம் பாக்ஸ் ஆபிஸில் சொதப்பியது. துளசிக்கு இதையடுத்து பட வாய்ப்புகளும் குறைந்து போனது. இதனால் அவரும் தற்போது படங்களில் பெரிதாக நடிப்பதில்லை.
மேலும் படிக்க | Megha Akash: தனுஷ் பட நடிகைக்கு விரைவில் திருமணம்..இவர்தான் மாப்பிள்ளையா..?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours