“இனி லியோ உங்களுடையது; ஸ்பாய்லர் வேண்டாம்” – லோகேஷ் கனகராஜ் பகிர்வு | Now Leo is yours no spoilers please director Lokesh Kanagaraj thalapathy vijay

Estimated read time 1 min read

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘லியோ’ திரைப்படம் வெள்ளித்திரையில் அடுத்த சில மணி நேரங்களில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் லியோ படம் குறித்தும், நடிகர் விஜய் மற்றும் ரசிகர்களையும் குறிப்பிட்டு சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

லியோ ரிலீஸ் ஆக இன்னும் சில மணி நேரங்களே உள்ளது. இந்த நேரம் மிகவும் உணர்வுப்பூர்வமானதாக உள்ளது. எனது எண்ணத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வாய்ப்பு கொடுத்த தளபதி விஜய்க்கு நன்றி. எங்களிடம் நீங்கள் காட்டிய மகத்தானது. உங்களது அர்ப்பணிப்புக்காக நான் எப்போதும் உங்களை மதிக்கிறேன்.

இதில் ரத்தத்தையும், வியர்வையும் உழைப்பாக செலுத்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. லியோ படத்துக்கான பணிகள் தொடங்கி ஒரு வருடத்துக்கும் மேலாகிறது. இரவும், பகலும் உழைத்து இதை படைத்துள்ளோம். அதற்கான தருணம் எதையும் என்னால் மறக்க முடியாது. இதில் பணிபுரிந்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்.

அன்பான ரசிகர்கள் எனக்கு கொடுத்த அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. லியோ அடுத்த சில மணி நேரங்களில் உங்களுடையதாக இருக்கும். உங்களுக்கு அற்புதமான காட்சி அனுபவம் கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம். ஒவ்வொரு ரசிகருக்கும் தனித்துவ அனுபவத்தை தர விரும்புவதால், படம் குறித்து ஸ்பாய்லர்கள் எதையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் இந்தப் படம் ‘LCU’-ன் கீழ் வருகிறதா, இல்லையா என்ற உங்களது அனைத்து எல்லா கேள்விகளுக்குமான பதிலை இன்னும் சில மணி நேரங்களில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அன்புடன் லோகேஷ் கனகராஜ்” என அவர் தெரிவித்துள்ளார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours