மீண்டும் சமூக வலைத்தளத்திற்கு திரும்பிய லட்சுமி மேனன்
18 அக், 2023 – 13:50 IST
சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, கும்கி படங்களின் மூலம் அதிரடியாக தமிழ் சினிமாவுக்கு வந்தவர் லட்சுமி மேனன், அதன்பிறகு பாண்டியநாடு, மஞ்சப்பை, ஜிகிர்தண்டா, கொம்பன் படங்களில் நடித்தார். எல்லா படங்களுமே வெற்றி பெற்றது. வேதாளம் படத்தில் அஜித் தங்கையாக நடித்தார். அதன்பிறகு அவர் சினிமாவில் பெரிதாக நடிக்கவில்லை. மேலும் உடல் எடையும் அதிகரித்ததால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘புலிக்குத்தி பாண்டி’ படத்தில் நடித்தார். அதற்கு பிறகும் பெரிதாக வாய்ப்புகள் இல்லை. இதன் காரணமாக சமூக வலைத்தளப் பக்கம் வராமல் ஒதுங்கியே இருந்தார். சமீபத்தில் வெளியான ‘சந்திரமுகி 2’ படத்தில் அவர் சந்திரமுகியாக வந்து போட்ட ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது. கங்கனாவை விட அதிகம் பேசப்பட்டார். தற்போது அவருக்கு மேலும் வாய்ப்புகள் வர துவங்கி உள்ளது.
கடந்தாண்டு அகஸ்ட் மாதம் இன்ஸ்டாகிராமில் கடைசியாக ஒரு போட்டோ போட்டவர் நேற்று ஒரு சேலையுடன் இருக்கும் படத்தை பகிர்ந்து மீண்டும் இன்ஸ்டா பக்கம் வந்திருக்கிறார். இதனால் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் அவரது பாலோயர்ஸ்.
+ There are no comments
Add yours