இதனிடையே விஜய்யின் “லியோ’ படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படாதது குறித்து தி.மு.க அரசு மீது கடுமையான விமர்சனங்களை ‘நாம் தமிழர் கட்சி’ ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்வைத்து வருகிறார். பலரும் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்காததற்கு தி.மு.க அரசுதான் காரணம் என சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகின்றனர்.
இந்நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் லியோ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டி ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். தளபதி விஜய் அண்ணாவின் லியோ, லோகேஷ் கனகராஜின் இயக்கம் ,அனிருத்தின் இசை, அன்பறிவு, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ என அனைவரையும் குறிப்பிட்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார். மேலும் LCU என்ற ஹாஸ்டேக்கையும் பதிவிட்டிருக்கிறார்.
+ There are no comments
Add yours