The Marvels: “இது ஒரு புது விதமான மார்வெல் படம்!” – தீபாவளி ரேஸில் களமிறங்கும் `தி மார்வெல்ஸ்’! | ‘The Marvels’ and Salman Khan’s ‘Tiger 3’ films gearing up for Diwali

Estimated read time 1 min read

தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்கள்

தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்கள்

அவ்வகையில் தீபாவளியை முன்னிட்டு தமிழில் ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் “ஜப்பான்’, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் X’ உள்ளிட்ட படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன. சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருந்த நிலையில் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையாமல் இருப்பதால் அது பொங்கலுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, மார்வெல் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ‘கேப்டன் மார்வெல்’ படத்தின் சீக்குவலான ‘தி மார்வெல்ஸ்’ திரைப்படம் இந்த தீபாவளிக்கு, அதாவது நவம்பர் 10ம் தேதி தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது. இதில் ‘கேப்டன் மார்வெல்’ கரோல் டான்வர்ஸ், ‘மிஸ் மார்வெல்’ கமலா கான் மற்றும் மோனிகா ராம்பியூ ஆகிய மூன்று பெண் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களும் இடம்பெறுகின்றன. உலகைக் காக்கப் போராடும் அதிரடி, ஆக்‌ஷன் கலந்த இதன் டிரெய்லர் அண்மையில் வெளியாகியிருந்தது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours