Sivakarthikeyan May The Reason For D Imman First Marriage Divorce Netizens Thoughts | டி.இமான் விவாகரத்துக்கு SK தான் காரணமா…? முழு பின்னணி என்ன?

Estimated read time 1 min read

D Imman Sivakarthikeyan Issue: சீரியல்களில் இசையமைத்து அதன் மூலம்  சினிமாவுக்குள் இசையமைப்பாளராக கால் பதித்தவர் டி,இமான். இவர் கிருஷ்ணதாசி என்ற சீரியலுக்கு தான் முதலில் பின்னணி இசை அமைத்தார். அதன்பிறகு கோலங்கள், போலீஸ் டைரி, மந்திர வாசல் உள்ளிட்ட சீரியல்களுக்கு இசையமைத்தார்.

12 வருட திருமண வாழ்வு

அதன் தொடர்ச்சியாக சினிமா வாய்ப்பு கிடைத்து தற்போது 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இப்படி சினிமாவில் அடிமட்டத்தில் இருந்து பெரிய இடத்தை பிடித்த இவர், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி மெளனிகாவை விவாகரத்து செய்தார். 2008-ம் ஆண்டு இமானுக்கும் மெளனிகாவுக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

உடனே 2ஆவது திருமணம்

விவாகரத்து பெற்ற அடுத்த ஆண்டே டி.இமான் அமலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்ததும் ட்விட்டரில், அமலியின் மகள் இனி என் மூன்றாவது மகள். என் திருமணத்தில் என்மகள்கள் பங்கேற்காதது வருத்தமே. அவர்கள் வருவார்கள் என காத்திருந்தேன் என பதிவிட்டிருந்தார். அதே நாளில் இமானின் முன்னாள் மனைவி மனம் உருகி ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். 

D Imman Sivakarthikeyan Issue

இமானின் முதல் மனைவியின் பதிவு

அதில், “இமானின் 2-வது திருமணத்துக்கு வாழ்த்துக்கள். 12 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த ஒருவரை இவ்வளவு சீக்கிரம் மாற்றிவிட முடியும் என்றால், உங்களைப் போன்ற நபருடன் என் நேரத்தை வீணடித்த நான் ஒரு முட்டாள் என எழுதி இருந்தார். அதோடு கடந்த இரண்டு ஆண்டுகளாக உங்கள் சொந்த பிள்ளைகளை பார்க்காத நீங்கள், புதிதாக ஒரு மகளை கண்டுபிடித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது என்றும்,  என் குழந்தைகளை நான் பாதுகாப்பேன், தேவைப்பட்டால் உங்கள் புதிய மகளையும் நான் பாதுகாப்பேன்” என்று ஒரெ போடாக இமான் மீது குற்றம்சாட்டி பதிவிட்டார்.

D Imman Sivakarthikeyan Issue

மேலும் படிக்க | அம்மா பொண்ணா இவங்க? இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!

சிவகார்த்திகேயனின் துரோகம்? 

இந்த பதிவை அடுத்து பலரும் டி. இமானை கடுமையாக விமர்சித்தனர். முதல் மனைவிக்கு துரோகம் செய்துவிட்டார் என்று நெட்டிசன்கள் வசைபாடினர். இந்தச்சூழலில் தான் தற்போது டி,இமான் பேட்டி ஒன்றில் கூறிய சில விஷயங்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது பேட்டியில், நடிகர் சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்துவிட்டார். அவர் செய்த துரோகத்தை வெளியே சொல்ல முடியாது. இதுகுறித்து சிவகார்த்திகேயனிடம் பேசினேன். அவர் கூறிய பதில்களை பொதுவெளியில் கூற விரும்பவில்லை.

விவாகரத்துக்கு SK தான் காரணமா?

இனி அவருடன் இந்த ஜென்மத்தில் படங்களில் சேர்ந்து பயணிக்க மாட்டேன். அவரது துரோகத்தை தாமதமாக தான் புரிந்து கொண்டேன். என் குழந்தைகளை இந்த விஷயங்கள் பாதிக்கும் அதனால் நான் இதுகுறித்து எதுவும் பேசவில்லை என பட்டும் படாமல் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி இருந்தார். இதனையடுத்து டி.இமான் தனது மனைவியை பிரிய சிவகார்த்திகேயன் தான் காரணமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

D Imman Sivakarthikeyan Issue

சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது. அடுத்தடுத்து ரஜினிமுருகன், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களுக்கு இமான் தான் இசையமைத்துள்ளார். இவர்கள் காம்பினேஷனுக்கு நல்ல ரீச் இருந்தது. ஆனால் அதன்பிறகு இந்த கூட்டணி கட் ஆனது. அதற்கு காரணம் தெரியாமல் இருந்த பலருக்கும் தற்போது டி.இமான் பதில் அளித்துள்ளார். மறக்க முடியாத, மன்னிக்க முடியாத துரோகத்தை டி.இமானுக்கு SK செய்துள்ளார். அது என்ன துரோகம் என்பது குறித்து சோஷியல் மீடியாவில் ஒரு பட்டிமன்றமே நடந்து வருகிறது. இதற்கு சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து எந்த பதிலும் இதுவரை வரவில்லை. அதனால் அடுத்தடுத்து இந்த விவகாரத்தில் என்ன நடக்கும் என்பதை பொருத்திருந்து காணலாம்.

மேலும் படிக்க | Sivakarthikeyan Net Worth: சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours