Shocking Statements Of D Imman First Wife Monica Richard In Sivakarthikeyan Issue | தவறு செய்தாரா SK…? சீனுக்குள் வந்த டி. இமானின் முன்னாள் மனைவி – முழு பின்னணி!

Estimated read time 1 min read

D.Imman Sivakarthikeyan Issue: இசையமைப்பாளர் டி.இமான் சமீபத்திய பேட்டியில் தனக்கு நடிகர் சிவகார்த்திகேயன் துரோகம் செய்துவிட்டதாகவும், இனி ஜென்மத்துக்கும் அவருடன் சேர்ந்து வேலை செய்ய மாட்டேன் என்றும் பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது. பரபரப்பு என்று சொல்வதை விட சிவகார்த்திகேயனுக்கு தலைவலியை கொடுத்தது என்றே சொல்லலாம். ஏனென்றால் என்ன துரோகம் என்று சொல்லாமல் குழந்தைகளை பாதிக்கும் என்பதால் சொல்ல மாட்டேன் என்று முடிச்சுகளுடன் ட்விஸ்ட் வைத்தார் இமான். இதனால் அரசல் புரசலாக பலரும் பல அவதூறுகளை பரப்பினர். இதனால் இத்தனை ஆண்டுகள் எஸ்.கே கட்டி காத்து வைத்திருந்த இமேஜ் மொத்தமும் டேமேஜ் ஆனது. பலரும் பலவிதமாய் பேச இந்த விஷயம் ட்ரெண்ட் ஆனது

‘SK நல்ல நண்பர்’

இந்த சூழலில் தான் இமானின் முன்னாள் மனைவியான மோனிகா ரிச்சர்ட் தனியார் பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்து இமான் மீது அடுக்கடுக்கான புகார்களை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தினார். அதில், சிவகார்த்திகேயன் மிகவும் ஜெண்டில்மேன் என்றும், இமானுக்கு நல்ல நண்பராக இருந்தார் என்றும் கூறியுள்ளார். அதோடு இமானின் தற்போதைய மனைவி அமலியை திருமணம் செய்துகொள்ளும் முடிவை எடுத்த பிறகு தான் கடந்த 2021-ம் ஆண்டு தன்னிடம் இருந்து விவாகரத்து கேட்டதாகவும், 46 நாட்களில் அரசியல்வாதிகளை எல்லாம் வைத்து மிரட்டி தன்னிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்டதாகவும் மோனிகா தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | டி.இமான் விவாகரத்துக்கு SK தான் காரணமா…? முழு பின்னணி என்ன?

SK ஆதரவு மோனிகாவுக்கா?

இந்த விவாகரத்தை தடுத்து மீண்டும் இமான் – மோனிகா ஒன்று சேர தான் சிவகார்த்திகேயன் முயற்சித்தாராம். ஆனால் தனது நண்பர் தனக்கு சப்போர்ட் செய்யாமல் மனைவிக்கு ஆதரவாக பேசியது இமானுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாம். நியாயத்தின் பக்கம் நின்றதால் சிவகார்த்திகேயன் இப்படி சிக்கிக்கொண்டதாகவும், இதைத்தான் துரோகம் என இமான் பேசியதாகவும் விளக்கம் அளித்துள்ளார். விவாகரத்து சமயத்தில் சிவகார்த்திகேயன் மோனிகாவுக்கு ஆதரவாக இருந்தாராம்.

அதோடு தற்போது சிவகார்த்திகேயனுடன் எந்த பேச்சுவார்த்தையும் தனக்கு இல்லை என்றும் உடைத்துப் பேசியுள்ளார் மோனிகா. இமானின் இந்த பேச்சு சிவாவின் குடும்பத்தை பாதிக்கும் என்பதை தெரிந்தே தான் இப்படி பேசியுள்ளார். அதோடு பட வாய்ப்புகளும் இல்லை என்பதால் சர்ச்சையாக பேசி வாய்ப்புக்கு அடிபோடுகிறார் என்றும் மோனிகா தனது கோபத்தை கொட்டி தீர்த்துள்ளார். தற்போது தனது இரு மகள்களுடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறாராம்.

ரசிகர்கள் விமர்சனம்

விவாகரத்து சமயத்தில் குழந்தைகள் வேண்டுமா அல்லது ஜீவனாம்சம் பணம் வேண்டுமே என்று இமான் கேட்டதாகவும், அதற்கு கூட குழந்தைகள் மட்டும் போதும் என்றும் கூறிவிட்டு பணம் வாங்காமல் வந்துவிட்டதையும் மோனிகா தெரிவித்துள்ளார். 

இதனால் சிவாவின் ரசிகர்கள் இமானை திட்டி தீர்த்து வருகின்றனர். இமானின் இந்த துரோகம் குறித்த சர்ச்சைப் பேச்சு தேவையற்றது என்றும் என்ன துரோகம் என்று சொல்லாமல் இப்படி பொதுவாக பேசியது சிவகார்த்திகேயனின் குடும்ப வாழ்க்கையையே ஆட்டிப்பார்க்கும் என்றும் பலர் இமானை விமர்சித்து வருகின்றனர். அதேபோல இமானின் ஆதரவாளர்கள் சிவாவை விளாசி வருகின்றனர். கணவன் மனைவி சண்டைக்குள் சிவா தலையிட்டது தவறு என்று பேசி வருகின்றனர். இப்படி இந்த விஷயம் பூதாகமராக வெடித்துள்ள நிலையில், இன்னும் சிவா தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | லியோ படத்தை வெளியிடுவதற்கு தடை – சென்னை உயர்நீதிமன்றம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours