Bigg Boss 7 Day 16: `அந்தப் பேரோட ஜெயிப்பேன்’ – ஜோவிகாவின் உறுதி; கலங்கிய கூல் சுரேஷ்; வென்ற அக்ஷயா|bigg boss 7 day 16 highlights

Estimated read time 1 min read

ஸ்டார் வென்ற அக்ஷயா – ‘நான் வளர்கிறேனே மம்மி’…

யாருக்கு ஸ்டார் என்பதை சின்ன வீட்டார் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும். கூல் சுரேஷிற்கு வாக்களித்தார் பிரதீப். ஆனால் வாக்குகள் மெஜாரிட்டியாக வராமல் கலவையாக வந்தது. எனவே மீண்டும் கூடி ஆலோசித்ததில் அக்ஷயா ஸ்டார் வென்றார். `பரவாயில்லையே.. படிப்படியா மின்ன ஆரம்பிச்சிருக்கீங்களே.. வாழ்த்துகள்’ என்று பிக் பாஸிடமிருந்து பாராட்டு கிடைத்ததும் அக்ஷயாவின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.

திடீரென்று கிச்சன் ஏரியாவிற்குள் ஒரு மோதல். பூர்ணிமாவும் விஷ்ணுவும் எலியும் பூனையுமாக பிறாண்டிக் கொண்டார்கள். விஷயம் இதுதான். ரவீனா வந்து காஃபி கேட்டிருக்கிறார். ‘எனக்கு காஃபி போடத் தெரியாது’ என்று பூர்ணிமா அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டார். இது விஷ்ணுவிற்கு கோபத்தை ஏற்படுத்தி விட்டது. ‘ஒண்ணு காஃபி போடணும்.. இல்லைன்னா சொல்லிட்டு வரணும்.. எதுவும் செய்யாம சுத்திட்டே இருக்கே. வேணும்ன்ட்டே பண்றே..” என்று அவர் அதட்டலாகச் சொன்னதற்கு பூர்ணிமா கோபித்துக் கொண்டார். கத்தரிக்காய் குழம்பு வைத்த பூர்ணிமாவிற்கு காஃபி போட தெரியாதா என்ன? கேட்டது ரவீனா என்பதுதான் அவருக்குப் பிரச்சினை போலிருக்கிறது. காஃபிக்குள் ஒரு ரணகள கலவரம்.

ஜோவிகா விஜயகுமார்

ஜோவிகா விஜயகுமார்

ஜோவிகாவின் கதைக்கு வாக்களித்திருக்கலாம் என்பது யுகேந்திரனின் அபிப்ராயம். ‘அந்தக் கதைல எது உண்மைன்னு தெரியாம எப்படி வாக்களிக்கிறது.. வேண்டாத பெயரை ஏன் இன்னமும் வெச்சிருக்கணும்?’ என்று கேட்ட பிரதீப் இன்னமும் கன்வின்ஸ் ஆகவில்லை போலிருக்கிறது. (இதற்கு எப்படியும் வனிதா விஜயகுமார், ஒரு தனி வீடியோ போட்டு பிரதீப்பை கன்னாபின்னாவென்று வறுத்தெடுக்கலாம்!).

`நீங்க கொஞ்சம் சத்தம் கம்மியா சொன்னா இந்தப் பிரச்சினை வந்திருக்காது’ என்று சமாதானம் பேசிய பூர்ணிமாவிடம் `நீங்க நினைக்கறது மட்டுமே கரெக்ட்டுன்னு நெனச்சிக்காதீங்க’ என்று விடாமல் மல்லு கட்டினார் விஷ்ணு. மனிதரைப் பாத்திரம் கழுவும் இம்சையிலிருந்து சற்று ரிலீஸ் செய்தால் நார்மல் மோடிற்கு வருவார் போலிருக்கிறது. லியோ படத்திற்கு டிக்கெட் கிடைப்பதை விடவும் விஷ்ணுவின் முகத்தில் சிரிப்பைப் பார்ப்பது கஷ்டமான விஷயமாக இருக்கிறது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours