“மிலன்கிட்ட வேலையை ஒப்படைச்சிட்டா போதும். நமக்கு எந்த பிரஷரும் இருக்காது!” – `பத்து தல’ இயக்குநர் | Pathu Thala Director Obeli N Krishna talks about Art Director Milan’s demise

Estimated read time 1 min read

“சிம்பு நடிச்ச ‘பத்து தல’க்கு முன் தெலுங்கில் ‘ஹிப்பி’னு ஒரு படம் இயக்கினேன். அந்த படத்தின் கலை இயக்குநர் மிலன். ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் சார்தான் அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வச்சார். அதில் இருந்துதான் அவரோடு நட்பானேன். அருமையான மனிதர். காசை வீணடிக்க விரும்பாத ஒரு கலை இயக்குநர். ரொம்பவும் கிரியேட்டிவ்வான மனிதர். ‘ஹிப்பி’ படத்தில ஒரு சீன்ல கதாநாயகி முகத்துல முட்டை எறியற சீன். அந்த முட்டை சிதறி ஹீரோயின் முகமெல்லாம் ஆகிடும். இந்த சீன் எடுக்கும் போது, ஹீரோயின் ‘சார் நான் சுத்த சைவம். முட்டையெல்லாம் வீச வேணாம்’னு பயந்து போய் சொல்றாங்க. இது பத்தி நான் மிலன்கிட்ட பேசினேன்.

அவர் உடனே, ‘இவ்ளோ தானா சார்’னு சொல்லி உடனே ஒரு முட்டை ஓட்டை மட்டும் வச்சு, அதை நல்லா சுத்தம் பண்ணிட்டு, உள்ளே மேங்கோ ஜெல்லியை நிஜ முட்டைக்கரு மாதிரியே உள்ளே வெச்சுட்டார். எல்லாருக்கும் ஆச்சரியமாகிடுச்சு. மிலன்கிட்ட வேலையை ஒப்படைச்சிட்டா போதும். நாம எந்த பிரஷ்ஷரும் இல்லாமல் இருக்கமுடியும். ஒரு கோடி செலவாகுற ஒரு விஷயத்தை 50 லட்சத்தில் முடிச்சு கொடுத்துடுவார். சிறந்த மனிதர்!

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours