Leo: சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு – தமிழ்நாட்டில் முதல் ஷோ எப்போது இருக்கும்? | Leo movie: Tamilnadu Government grants permission for the special show

Estimated read time 1 min read

இந்நிலையில், ‘லியோ’ படத்திற்குச் சிறப்புக் காட்சி வழங்கப்பட வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக முதல் நாள் (19-ம் தேதி), இரண்டு சிறப்புக் காட்சிகளுக்கு (அதிகாலை 4 மணி, 7 மணி என மொத்தம் ஒரு நாளைக்கு 6 காட்சிகள்) அனுமதி வேண்டும் என்றும், அடுத்தடுத்த விடுமுறை நாள்களுக்கு (20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை) ஒரு நாளுக்கு 5 காட்சிகளுக்கு (அதிகாலை 7 மணி மட்டும்) அனுமதி வேண்டும் என்றும் வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தது.

இதைப் பரிசீலனை செய்த தமிழக அரசு, ஒரேயொரு சிறப்புக் காட்சிக்கு மட்டும் அனுமதி அளித்திருக்கிறது. அதன்படி ஒரு நாளைக்கு 5 காட்சிகள் என மொத்தம் 6 நாள்களுக்கு அதாவது, 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

விடுமுறை இல்லாத முதல் நாளிலும் 5 காட்சிகளுக்கு அரசு அனுமதி அளித்திருந்தாலும், எப்போது முதல் ஷோ போடவேண்டும் என்பது குறித்த தெளிவான விளக்கம் எதுவும் அந்த உத்தரவில் தரப்படவில்லை. 5 காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால், அந்தந்த திரையரங்க நிர்வாகத்தின் விருப்பப்படி முதல் காட்சி என்பது அதிகாலை 7 மணி முதல் காலை 9 மணி வரை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்று தெரிகிறது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours