லியோ – அமெரிக்கா ஐமேக்ஸ் பிரிமியர் முன்பதிவு மீண்டும் ஆரம்பம்
16 அக், 2023 – 10:55 IST
விஜய் நடித்துள்ள ‘லியோ’ படம் அமெரிக்காவில் மிக அதிகமான தியேட்டர்களில் வெளியாகிறது. அங்கு வெளியீட்டிற்கு முன்தினமே பிரிமியர் காட்சிகள் நடைபெற உள்ளன. ஐமேக்ஸ் தியேட்டர்களிலும் அதற்கான முன்பதிவு ஆரம்பமாகி நடந்து வந்தது. இந்நிலையில் அந்த முன்பதிவுகளை திடீரென ரத்து செய்தனர். குறித்த நேரத்தில் ‘கன்டென்ட்’ வராததே அதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது.
ஆனால், இப்போது மீண்டும் ஐமேக்ஸ் பிரிமியர் காட்சிகளுக்கான முன்பதிவை ஆரம்பித்துள்ளனர். சில தியேட்டர்களில் அதற்கான முன்பதிவு ஆரம்பமாகி நடந்து வருகிறது. மேலும் சில தியேட்டர்களிலும் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. இதன் காரணமாக முன்பதிவிலேயே ஒரு மில்லியன் யுஎஸ் டாலர் வசூலை ‘லியோ’ கடக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
+ There are no comments
Add yours