தற்போது வெளியான சீசன் 2 புரொமோவில் ஸ்டாலின் கதாபாத்திரத்தின் மகன்களில் ஒருவராக பிரசாந்த்தே நடிப்பது தெரிந்ததும், ‘மண்டை மேல உள்ள கொண்டைய மறந்துட்டீங்க ப்ரோ!’ என்பது போன்ற பல கருத்துகள் சமூகவலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வருகின்றன. ‘ஒண்ணு சீரியல் பெயரை மாத்தியிருக்கலாம்… இல்லைன்னா ஆர்ட்டிஸ்ட்டையாச்சும் மாத்தியிருக்கலாம்… ரெண்டுமே இல்லைன்னா எப்படிங்க இது?’ என சிலர் கமென்ட்டில் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அதாவது முந்தைய சீசனில் தம்பி மனைவியின் உறவுக்காரராக இருந்தவர், இந்த சீசனில் மகனாக மாறியது குறித்தக் கேள்வியே அது!
இன்னும் சிலர், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் பார்த்ததே எங்களுடைய ஃபேவரைட் நடிகர்களுக்காகத்தான்! அவங்களே இல்லைன்னா எப்படி?’ என ஆர்ட்டிஸ்ட்களின் ரசிகர்களாக ஒருபுறம் பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர். அதே சமயம், ‘சீசன்கள் மாறும்போது இதெல்லாம் நடக்கறதுதான்! கண்டுக்காதீங்க மக்கா…’ என்பதாகவும் கமென்ட்கள் வந்து விழுகின்றன.
எது எப்படியோ சீசன் 2 விரைவிலேயே ஒளிபரப்பாக இருக்கிறது. இன்னொரு மகன் கதாபாத்திரத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘சண்டக்கோழி’ தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் விஜே கதிர் நடிக்கிறார். கடைசி மகனாக ஆகாஷ் நடிக்கிறார். ஆகாஷ் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் `அனாமிகா’ தொடரில் ஏற்கெனவே நடித்திருக்கிறார். தவிர வெப் சீரிஸ், படங்கள் எனப் பல்வேறு பிளாட்ஃபார்ம்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 புரொமோ குறித்த உங்களுடைய கருத்துகளையும் மறக்காம கமென்ட் பண்ணுங்க!
+ There are no comments
Add yours