தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல கோடி மக்களால் பார்க்கப்படும் ஒரு நிகழ்ச்சி, பிக்பாஸ். 2017ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக்பாஸ் சீசன் 7:
சர்ச்சைக்குரிய நிகழ்ச்சியாக இருந்தாலும், மக்களை நன்றாக மகிழ்விக்கும் பொழுது போக்கு நிகழ்ச்சியாக இருக்கிறது, பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. சீசனுக்கு சீசன் ரூல்ஸ்கள்தான் மாறும், ஆனால் இந்த சீசனில் பிக்பாஸ் வீடே இரண்டு பட்டுவிட்டது. பிக்பாஸ் கேப்டனாக இருப்பவர்கள் ஏதேனும் ஒரு அடிப்படையில் சிலரை தேர்ந்தெடுத்து ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் அனுப்புகின்றனர். அவர்கள், வீட்டின் சமையல் வேலைகளை பார்த்துக்கொள்கின்றனர். பிக்பாஸ் இல்லத்தில் நடக்கும் டாஸ்குகளில் அவர்களுக்கு பங்கேற்க வாய்ப்புகள் தரப்படாது. இவ்வாறு, புதுப்புது ரூல்ஸ்கள் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போடப்பட்டுள்ளன.
இதுவரை வெளியேறியவர்கள்..
18 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டி, நாளுக்கு நாள் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், முதல் வாரத்தில் அனன்யா ராவ் வெளியேறினார். இவர் ஸ்மார் பாஸ் இல்லத்தில் இருந்ததால் பலர் இவரை நாமினேட் செய்தனர். வெளியிலும் பெரிதாக இவரது பெயர் வெளியில் தெரியாமல் இருந்ததால் வாக்குகளையும் அனன்யா குறைவாக பெற்றதற்கு காரணமாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | பிக்பாஸில் இருந்து வெளியேறியவுடன் பவா செல்லதுரை போட்ட முதல் போஸ்ட்..!
தாமாக முன்வந்து வெளியேறிய பவா..
கதை சொல்லியான பவா செல்லதுரை, பிக்பாஸ் இல்லத்தில் முதல் வாரத்திற்கு பிறகு தன்னால் இந்த கேம்-ஷோவில் இருக்க முடியாது என்று கூறி வெளியேறிவிட்டார். இவர் வெளியேறியதற்கு உடல் அளவிலும் மன அளவிலும் தன்னால் இந்த இல்லத்தில் இருந்து சமாளிக்க முடியாததுதான் காரணம் என்று கூறினார். இவர், பிக்பாஸ் இல்லத்தில் படிப்பு குறித்து பேசிய விஷயத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதற்கு அவரே சமீபத்தில் விளக்கமளித்து ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார்.
இந்த வார நாமினேஷன்..
முறைப்படி, பிக்பாஸ் போட்டியில் இருந்து வாரம் ஒருவர் வெளியேற்றப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த வாரம் அனன்யா வெளியேற, அவருடன் கூடவே பவா செல்லதுரையும் வெளியேறினார். அதனால், கடந்த வாரம் நாமினேஷனில் தேர்வானவர்கள் கூட யாரும் வெளியேற்றப்படவில்லை. இதையடுத்து, இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைப்பெற்றது. இதில், பிக்பாஸில் முக்கிய போட்டியாளர்களாக கருதப்படும் சிலர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்கள் யார் யார்?
நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள்..
மாயா, மணி சந்திரா, அக்ஷயா, வினுஷா, நிக்ஸன், விஜய், பிரதீப், விசித்ரா, சரவண விக்ரம், ஐஷூ, மற்றும் பூர்ணிமா உள்ளிட்டோர் இந்த வாரத்தில் சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் யார் வெளியேறப் போகிறார்கள் என்பது இந்த வார இறுதியில் தெரியும்.
யார் வெளியேற வாய்ப்பு அதிகம்..?
பிக்பாஸ் இல்லத்தில் கண்டன்டிற்காக என்றே சிலர் சில வேலைகளை பார்க்கின்றனர். அப்படிப்பட்டோர் லிஸ்டில் மாயா மற்றும் பூர்ணிமா ஆகியோரும் உள்ளனர். பிக்பாஸ் போட்டியாளர்கள் என்பதை இருவரும் வளர்ந்து விட்டு, பிறரை பற்றி நன்றாக பின்னால் பேசும் ‘காசிப் தோழிகளாக’ இருவரும் வலம் வருகின்றனர். இவர்களில் யாரேனும் ஒருவர் கண்டிப்பாக இந்த வாரம் எவிக்ட் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவர்களை தாண்டி, பிறரை கொஞ்சம் கடுப்பேற்றும் போட்டியாளராக இருப்பவர், பிரதீப். இவரும் இந்த வாரம் வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் சம்பளம் வாங்கும் ‘அந்த’ பாேட்டியாளர் யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours