Bigg Boss 7 Exclusive: சீசனின் முதல் எவிக்‌ஷன்; கடைசி நிமிடத்தில் நடந்த மாற்றம்! வெளியேறியது யார்?

Estimated read time 1 min read

விஜய் டிவியில் கடந்த அக்டோபர் முதல் தேதியிலிருந்து ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7-ன் முதல் எவிக்‌ஷன் நிகழ்ந்துள்ளது.

விஜய் டிவியின் ஹிட் ஷோவான பிக் பாஸ் தமிழ் சீசன் 7 கடந்த அக்டோபர் முதல் தேதி தொடங்கியது. இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக இரண்டு வீடுகள். ஒவ்வொரு வாரமும் போட்டியிலிருந்து வெளியேறுவதற்கான நாமினேஷன் பட்டியலில் இடம் பிடிப்பவர்கள் இரண்டாவது வீட்டுக்கு அனுப்பப் படுகிறார்கள். இந்த இரண்டாவது வீட்டிற்குச் செல்கிற போட்டியாளர்கள்தான் மற்ற எல்லோருக்குமான சமையல் உள்ளிட்ட எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும்.

Bigg Boss 7 – கமல்

சில சீசன்களில் ‘முதல் வாரம் என்பதால் பிக் பாஸ் யாரையும் வெளியில் அனுப்ப விரும்பவில்லை’ எனச் சொல்லி எவிக்ஷன் இல்லாமலிருந்தது நினைவிருக்கலாம். ஆனால் இந்த சீசனில் அந்தச் சலுகையெல்லாம் இல்லை. ஷோ தொடங்கிய முதல் நாளே போட்டியாளர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து முதல் கட்டமாக எழுத்தாளர் பவா செல்லத்துரை, ஜோவிகா உள்ளிட்ட சிலர் இரண்டாவது வீட்டிற்குச் சென்றனர்.

தொடர்ந்து பிக் பாஸ் வீட்டின் விதியை மீறியதாக நடிகை விசித்ரா, யுகேந்திரன் உள்ளிட்ட சிலர் இரண்டாவது வீட்டுக்கு அனுப்பப் பட்டார். இந்த இரண்டாவது வீட்டிலிருப்பவர்களில் மிகக் குறைவான ஓட்டுகளை வாங்கிய ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்பட வேண்டும். அந்த வகையில் யுகேந்திரனே மிகக் குறைந்த ஓட்டுகள் வாங்கியிருந்ததாகத் தெரிகிறது. அதற்கடுத்த இடங்களில் பவா செல்லத்துரையும் அனன்யாவும். எனவே நடிகரும் பின்னணிப் பாடகருமான யுகேந்திரன் வாசுதேவன் எலிமினேட் ஆக வேண்டும்.

அனன்யா ராவ்

கமல் கலந்து கொள்ளும் எவிக்‌ஷனுக்கான வார இறுதி ஷூட்டிங் இன்று காலை பிக் பாஸ் செட்டில் தொடங்கியது. யுகேந்திரன் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதற்கான எபிசோடின் ஷூட்டிங்காகத்தாதான் அது தொடங்கியது. ஆனால் என்ன காரணமோ கடைசி நிமிடத்தில் அதிரடி ட்விஸ்ட் அரங்கேறி அனன்யா வெளியேறியிருக்கிறார்.

யுகேந்திரன் வெளியேறாத பட்சத்தில் அவருக்கு அடுத்த இடத்திலிருந்த பவா செல்லத்துரைதான் வெளியேறியிருக்க வேண்டும். ஆனால் அவரும் சேவ் ஆகியிருக்கிறார். இந்தக் கடைசி நேர மாற்றங்களால் ஷூட்டிங் சில மணி நேரங்கள் தாமதமானதாகவும் சொல்லப்படுகிறது.

அனன்யா எலிமினேட்டான எபிசோடு நாளை (8/10/23) இரவு ஒளிபரப்பாக இருக்கிறது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours