லோகேஷ் கனகராஜ்-விஜய் ஆகியோர் இரண்டாவது முறையாக ஒன்றிணைந்து பணியாற்றி இருக்கும் படம், லியோ. ஏற்கனவே ‘மாஸ்டர்’ படம் மூலம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த இவர்கள், தற்போது லியோ படம் மூலம் இன்னாரு ஹிட் கொடுக்க தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தற்போது மாஸ் ஹீராேக்களின் படங்களுக்கு இசையமைத்து மாஸ் இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத்தும் படத்திற்கு பெரிய பலமாக இருக்கிறார். அது மட்டுமன்றி, இப்படத்தில் கவனிக்க கூடிய விஷயங்கள் பல இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
எல்.சி.யு கதாப்பாத்திரங்கள்:
தமிழ் சினிமாவில் புதிதாக ‘லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்’ என்பதை உருவாக்கி விட்டார் லோகேஷ் கனகராஜ். இந்த எல்.சி.யுவில் தற்போது வரை கைதி மற்றும் விக்ரம் ஆகிய படங்கள் இருப்பது உறுதி. ஆனால், லியோ படம் இதில் இருக்கிறதா இல்லையா என்பது இன்னும் தெரியவில்லை. இது குறித்த கேள்விகளை கேட்ட போது, லோகேஷ் கனகராஜ், “படத்தில் வந்து பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டார். லியோ படம் எல்.சி.யுவில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டால் விக்ரம், தில்லி, ரோலக்ஸ், அமர் உள்ளிட்ட கதாப்பாத்திரங்கள் ஒன்றினைவது உறுதி. மேலும், லியோ படத்தில் 10 நிமிடங்களுக்கு கமல்ஹாசன் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பல கதாப்பாத்திரங்கள் லியோ படக்குழுவினரால் மறைத்து வைக்கப்பட்டுள்ளதால் இது குறித்த ஆர்வம் ரசிகர்களுக்கு மிகவும் மிகுதியாக உள்ளது.
மேலும் படிக்க | ‘லியோ’ படத்தில் நடிக்க விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு? முழு விவரம்!
லியோ கதாப்பாத்திரங்கள்:
இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ள விஜய்யின் கதாப்பாத்திரமே லியோ தாஸ், பார்த்தி என்று இரண்டு பெயர்களால் அழைக்கப்படுகிறது. ஹீரோ கதாப்பாத்திரமே இப்படி மர்மம் நிறைந்திருப்பதாக இருக்க, பிற முக்கிய கதாப்பாத்திரங்களாக வரும் சஞ்சய் தத் மற்றும் அர்ஜூன் அகியோரின் கதாப்பாத்திரங்களும் என்னென்ன என்பது காண்பிக்கப்பட்டு விட்டது. கௌதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் போலிஸாக வருகிறார். இவர்களை தாண்டி முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்திருப்பவர்கள் மன்சூர் அலிகா, மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்டோர். இதில் அனுராக் காஷ்யப்பும் முக்கிய வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மடோனா சபாஸ்டிய, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோரும் இதில் நடித்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. இவர்களை பார்க்கவும் ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.
த்ரிஷாவின் தலையெழுத்து என்ன?
தன் படத்தில் வரும் காதல் ஜோடிகளாக வரும் கதாப்பாத்திரங்களில் ஒருவரை கொல்வதையே வழக்கமாக கொண்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். கைதி படத்தில் கார்த்தியின் மனைவியை கண்ணில் காட்டாமலேயே கொன்று விட்டார், காவல் நிலையத்தில் இருக்கும் காதல் ஜோடிகளில் ஒருவரையும் அப்படத்தில் இறந்து விடுவது போல கதை எழுதியிருப்பார். மாஸ்டர் படத்தில் பார்கவ் (சாந்தனு) கதாப்பாத்திரத்தை கொன்றிருப்பார். அடுத்து விக்ரம் படத்தில் அமர்-காயத்ரியின் காதலை அழகாக காண்பித்து விட்டு, காயத்ரியைன் தலையை வெட்டி வீசியிருப்பார். இதனால், லோகேஷ் கனகராஜிற்கும் காதலுக்கும் ஒத்து வராது என்று கூறப்படுகிறது. லியோ படத்தில் த்ரிஷாவின் போஸ்டர் வெளியான போது அதில் ரத்தம் தெரிக்க விடப்பட்டிருந்தது. இதனால்,“ஒரு வேலை த்ரிஷாவிற்கும் இதே நிலைதானோ..” என்று ரசிகர்கள் சந்தேகிக்க ஆரம்பித்துள்ளனர்.
மேலும் படிக்க | லியோ படத்தின் ‘ஸ்பெஷல்’ புகைப்படங்களை வெளியிட்ட த்ரிஷா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours